ராமகிருஷ்ணர் சிந்தனை வரிகள் – தமிழ்
Ramakrishnar inspirational quotes in Tamil
ராமகிருஷ்ணர் சிந்தனை வரிகள் – தமிழ்
Ramakrishnar inspirational quotes in Tamil
ராமகிருஷ்ணர் சிந்தனை வரிகள் – தமிழ்
Ramakrishnar inspirational quotes in Tamil
1.கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வந்துவிட்டால் வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
2.முதலில் கடவுளைத் தேடு. அதன்பின், உலகப் பொருட்களை தேடி செல்லலாம்.
3.எல்லா மனிதர்களிடத்திலும் கடவுள் இருக்கிறார். ஆனால், கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை.
4.மனிதப்பிறவி கிடைப்பதற்கு அரிதானது. இதை பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.
5.கடவுளின் திருநாமத்தை இடைவிடாது ஜெபித்தால் உடல், மனம் எல்லாம் தூய்மை பெறும்.
6.பொறுமை மனிதர்கள் அனைவருக்கும் அவசியமானது. பொறுமையுள்ளவனுக்கு என்றுமே அழிவு உண்டாகாது.
7.அக்கறை உள்ளவனுக்கு அனைத்தும் எளிதாக கிடைக்கும்.
8.நம்பிக்கை ஆழமானால் கடலையும் தாண்டலாம்.
9.தன்னை குருவாக கருதிக் கொண்டு ஒவ்வொருவரும் மக்களுக்கு அறிவுரை வழங்குவது நல்லதல்ல.
10.கண்களே உள்ளத்தின் வாசல். அதன் மூலம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
11.சாதகப்பறவை மழை நீரை மட்டும் அருந்துவது போல, நல்லவர்கள் நல்லதை மட்டும் எப்போதும் சிந்திப்பார்கள்.
12.உலகியல் வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் துன்பம் இருந்து கொண்டே இருக்கும்.