ரமணர் சிந்தனை வரிகள் – தமிழ்
Ramanar inspirational quotes in Tamil
ரமணர் சிந்தனை வரிகள் – தமிழ்
Ramanar inspirational quotes in Tamil
ரமணர் சிந்தனை வரிகள் – தமிழ்
Ramanar inspirational quotes in Tamil
1.விதி என்பதென்ன? இறைவனைச் சரணடையுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும். எனவே எல்லாப் பொறுப்புகளையும் இறைவனிடமே விட்டுவிடுங்கள். பின்னர் விதி உங்களை என்ன செய்யும்?
2.நீ உன்னை அறிந்துகொள். உலகவினை தன்னாலே நடைபெறும். நடத்துவோன் நடத்துகிறான். நீ சாட்சியாக இரு. நான் என்று கூறிக்கொண்டு எதிலும் முன் நிற்காதே.
3.மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள்ளேயே இருப்பதுதானேயன்றி, வெளியேயுள்ள வேறெவ்விதப் புறக்காரணங்களாலும் வருவதன்று.
4.பிறருடைய குற்றங்களைப் பாராமல், குணங்களை மட்டுமே எண்ணிப் பார்க்கும் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும்.
5.ஞானி உலகத்தைக் காண்கிறான். அஞ்ஞானி தான் உலகத்தை வெறுக்கிறான்.
6.மரணத்திற்கு பிறகு என்ன என்பதற்கு விடை தேட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழ்வோம். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.