சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Sivananda inspirational quotes in Tamil(PART 01)
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Sivananda inspirational quotes in Tamil(PART 01)
1.பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. விளைவைப் பற்றி சிந்திக்காமல் துணிவுடன் கடமையாற்றுங்கள்.
2.உடல் ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு அடிப்படையானவை.
3.பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை.
4.பயனுள்ள பொழுதுபோக்கில் ஆர்வமுடன் ஈடுபட்டால் மனதிலும், உடம்பிலும் புத்துணர்ச்சி உண்டாகும்.
5.ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
6.பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள்.
7.இறைவன் எங்கு இருக்கிறார்? திருத்தலங்களில், தீர்த்தங்களில், சாஸ்திரங்களில் மட்டும்தான் இருக்கிறாரா?
8.உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள்.
9.அதிகாலையில் கண் விழிப்பதும், இரவில் முன்நேரத்தில் தூங்கச் செல்வதும் ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
10.கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.