சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Sivananda inspirational quotes in Tamil(PART 02)
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Sivananda inspirational quotes in Tamil(PART 02)
11.நல்ல பழக்கங்களின் மூலம் மனதில் எழும் தீய ஆசைகளைக் கட்டுப்படுத்தவோ அகற்றவோ முடியும்.
12.மனதுடன் போர் நடத்தாதீர்கள். தியானத்தால் ஒருநிலைப்படுத்துங்கள். இதுவே மகிழ்ச்சிக்கான வழி.
13.பால், பழம் போன்ற சாத்வீக உணவை சாப்பிட்டால் மனதில் அமைதியும், ஆனந்தமும் குடியிருக்கும்.
14.தண்ணீரில் உப்பைக் கரைப்பது போல மனம் எப்போதும் இறைச் சிந்தனையிலேயே இருக்கட்டும்.
15.உடல் வலிமை மிக்கவனாக இருந்தாலும் மனதை அடக்குவது கடினம். அதற்கு விடாமுயற்சியும், பயிற்சியும் அவசியம்.
16.மனதை அடக்கும் ரகசியத்தைக் கற்றுக் கொண்டால் எதில் ஈடுபட்டாலும் சாதனை படைக்க முடியும்.
17.அடிமையாக கிடப்பதும், சுதந்திரமாக வாழ்வதும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.
18.நாய் தன் எஜமானனைத் தொடர்வது போல, மனம் ஐம்புலன் வழியாக ஆசையைப் பின் தொடர்கிறது.
19.அலைபாயும் மனதை தியானப் பயிற்சியின் மூலம் ஒருமுகப்படுத்தி வலிமையுள்ளதாக மாற்ற முடியும்.
20.நேர்மை ஒன்றே உலகத்தின் ஆதாரம். எண்ணத்திலும், செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.