வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Vallalar inspirational quotes in Tamil(PART 06)
வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Vallalar inspirational quotes in Tamil(PART 06)
51.வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும்.
52.மனிதனாகப் பிறந்தவன், மற்றவர்களுக்கு உதவும் மனம் உடையவனாக இருக்க வேண்டும். பிறர்படும் துயரை கண்டும் காணாது இருப்பவன் எதற்கும் உதவாதவன்.
53.பொய், புறங்கூறுவது போன்ற செயல்களால் முன்னேறலாம் என நினைக்கக் கூடாது. அது ஒரு நாள் மிகப்பெரிய அழிவில் கொண்டு போய் விட்டுவிடும்.
54.ஓர் உயிரைக் கொன்று மற்றோர் உயிரின் பசியை போக்குவது கடவுள் அருளுக்கு ஏற்புடையதல்ல.
55.தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார்.
56.எதற்காகவும் கோபம் கொள்வதோ, பொய் சொல்வதோ, பிறர் நலன் கண்டு பொறாமை கொள்வதோ கூடாது.
57.உரத்துப்பேசுவது, விவாதம் செய்வது, வழக்கிடுவது, பிறரிடம் சண்டையிடுவது கூடாது.
58.சூரிய உதயத்துக்கு முன்னால் விழிப்பது சிறந்த பழக்கம். அதிகாலையில் கடவுளைத் தியானம் செய்தல் அவசியம். பின்னர் காலைக்கடன்களை முழுமையாக செய்தல் வேண்டும். இளம் வெயிலில் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
59.பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயலுங்கள். நற்குணங்களை பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.
60.நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்