சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #10
SatyaSai inspirational quotes in Tamil Part 10
SatyaSai inspirational quotes in Tamil Part 10
91.பெற்ற தாயைப் போற்றுங்கள். அவளின் தியாகமே உங்களை ஆளாக்கியது என்பதை மறவாதீர்கள்.
92.பாரத அன்னையின் புதல்வர்கள் என்பதில் நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.
93.கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம் இருந்து விட்டால் நம் வாழ்வே சொர்க்கமாக மாறி விடும்.
94.பிறர் நலன் பேணுவதே சொர்க்கம். மற்றவர் வளர்ச்சி கண்டு மனம் புழுங்குவதே நரகம்.
95.நடந்ததையே எண்ணி வருந்தாதீர்கள். நிகழ்காலத்தைப் பயனுடையதாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
96.குறிக்கோளைக் கருத்தில் கொண்டு, அதில் வெற்றி கிடைக்கும் வரை ஆர்வமுடன் செயல்படுங்கள்.
97.நல்லது கெட்டதை பகுத்தறியும் விவேகத்தைக் கற்றுக் கொடுப்பதே உண்மையான கல்வியாகும்.
98.பெண்கள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைப் பெற விரும்பினால் ஆபத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
99.சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீது தர்மம் என்னும் கட்டடம் இருக்கிறது. அதாவது சத்தியம் தர்மத்தைத் தாங்குகிறது.
100.பிறருக்காகச் செய்யும் சிறு பிரார்த்தனை கூட, அளப்பரிய நன்மையை நமக்கு கொடுத்து விடும்.
சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #10
SatyaSai inspirational quotes in Tamil Part 10