சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #09
SatyaSai inspirational quotes in Tamil Part 09
SatyaSai inspirational quotes in Tamil Part 09
81.எல்லாருக்கும் மதிப்பளிப்பதோடு, அவர்களின் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பதே சிறந்த நாகரிகம்.
82.இன்பத்தில் கடவுளை சிந்திக்காமல், துன்பத்தில் மட்டும் அவரைத் தேடுவது வேடிக்கையானது.
83.உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் நல்ல உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
84.நல்லவர்களுடன் நட்பு கொள்ளுங்கள். நல்லறிவு தரும் நுால்களைப் படியுங்கள்.
85.கடமை தவறாமை, தர்மவழியில் நடத்தல் ஆகிய இரண்டையும் பின்பற்றினால் கடவுளை எளிதாக அடைய முடியும்.
86.உள்ளத்தூய்மை பெற, சுயநலமின்றி பிறருக்கு சேவை செய்து வாழ்வது மட்டுமே வழி.
87.செய்யும் செயல் சரியானது தானா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டு செயலாற்றுங்கள்.
88.எண்ணம், சொல், செயல் மூன்றாலும் சத்தியத்தை கடைபிடிப்பவன் எப்போதும் சாந்தமுடன் இருப்பான்.
89.காலத்தை வென்றவர் கடவுள் ஒருவரே. அவரை கணப்பொழுதும் மறந்து விடாதீர்கள்.
90.நமக்கு தேவையானதைக் கடவுளிடம் வேண்டிக் கொள்வதில் தவறில்லை.
சத்யசாய் சிந்தனை வரிகள் – தமிழ் #09
SatyaSai inspirational quotes in Tamil Part 09