குருநானக் சிந்தனை வரிகள் – 02 | Guru Nanak inspirational quotes in Tamil - 02
9.இறைவன் நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டாதவன். முடிவில்லாத பெருமையைக் கொண்டவன். மனம், வாக்கு, காயத்தால் அறிய இயலாதவன். அவனே நமக்கு அருள் செய்வதற்காக தன்னைக் குறைத்துக் கொள்கிறான்.
10.உலகத்தின் செல்வம் முழுவதையும் செலவழித்தாலும் திருப்தியை விலைக்கு வாங்க முடியாது.
11.இறைவன் ஒருவனே என்றாலும், எண்ணற்ற தோற்றங்களில் அவன் காட்சி தருகிறான். அனைத்து உயிர்களையும் படைத்து காத்து அருள்புரிபவன் அவனே.
12.ஒவ்வொருவரும் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கின்றனர். ஆனால், உள்ளத்தில் அன்பு இல்லாமல் வெறும் உச்சரிப்பால் மட்டுமே அவனை அடைய முடியாது.
13.செல்வச்சீமான் என்றாலும், நாடாளும் மன்னன் ஆனாலும் எல்லா உயிர்களும் இறைவன் முன் சமமே. சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
14.சகதி நிறைந்த சேற்றில் பிறக்கும் தாமரை, அதிலிருந்து எப்படி விலகி இருக்கிறதோ, அதுபோல வாழ்வில் பட்டும் படாமலும் இருக்கப் பழகுங்கள்.
15.நன்மை செய்தவர்க்குத் திருப்பி நன்மை செய்வது உலக இயல்பு. ஆனால், தீமை செய்தவர்க்கும் நன்மை செய்வது உத்தமருக்குரிய உயர்ந்த குணம்.
16.மன்னிக்கும் உள்ளத்தில் கடவுள் குடியிருக்கின்றார்.