கிருபானந்த வாரியார் சிந்தனை வரிகள் - 04 | Kirupanandha Variyar inspirational quotes in Tamil – 04
31.மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் லட்சியம் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மிருகநிலைக்கு தாழ்ந்து விடுவோம்.
32.படிப்பினால் ஏற்படும் அறிவை விட, அனுபவத்தால் உண்டாகும் அறிவு அதிக பயனைக் கொடுக்கும்.
33.வெயில் அதிகமாக இருந்தால் மழை வர வாய்ப்பு உண்டாகும். அதுபோல, அநீதி அதிகமாகும் போது பூமியில் மகான்கள் பிறக்கின்றனர்.
34.வயது முதிர்ந்த காலத்தில் பட இருக்கும் துன்பத்தைப் பற்றி சிந்திப்பவன், வாழ்வில் தடுமாற தேவையிருக்காது.
35.நல்லவர்கள் தீயவனைக் கண்டால் வழி விட்டு ஒதுங்குவது பயத்தினால் அல்ல. மானம் காக்கவே.
36.வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்தது.
37.பெற்றோர் ஒழுக்கத்தைப் பேணி வாழ்ந்தால், பிள்ளைகளும் அதனைப் பின்பற்றி வாழ்வர்.
38.எந்த செயலில் ஈடுபட்டாலும் சுயநலம் கொள்ளாமல் பிறரின் நலனுக்காகச் செய்யுங்கள்.
39.மனிதனுக்கு மட்டுமே சிரிக்கத் தெரியும். மனம் விட்டுச் சிரித்தால் நோய் விலகும்.
40.பயன் அளிக்கும் எந்த தொழிலிலும் ஈடுபடலாம். ஆனால் பிறரிடம் கைநீட்டி பிழைப்பது மட்டும் கூடாது.