சத்யசாய் சிந்தனை வரிகள் - 11 | Satya Sai inspirational quotes in Tamil - 11
101.பிரார்த்தனை என்பது கடவுளிடம் பேசுவதாகும். தியானம் என்பது கடவுளின் விருப்பத்தைக் காதால் கேட்பதாகும்.
102.பிறருக்குத் தொண்டாற்றுவதே மேலான மகிழ்ச்சி. இந்த உண்மையை உணர்ந்தவரே பாக்கியசாலி.
103.அன்பு விரிந்து கொண்டே செல்லும். தன்னைப் போல எல்லோரும் நலமுடன் வாழ அன்பு வழிவகுக்கும்.
104.மற்றவருக்கு அறிவுரை கூறுவது மிக எளிது. ஆனால், தன்னிடம் உள்ள குறைகளைப் போக்குவது கடினமானது.
105.பெற்றோரை மதிப்புடன் நடத்துங்கள். இளைஞரான நீங்களும் வருங்காலத்தில் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும்.
106.மலர் போல மனம் இருக்க வேண்டும். அதில் நல்லெண்ணம் என்னும் நறுமணம் பரவ வேண்டும்.
107.ஆசைக்கு ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இதுவே நிம்மதிக்கான வழிமுறை.
108.மனிதன் கடமையில் பொறுப்புடன் இருந்தால், அதற்குரிய நற்பலன் கிடைத்தே தீரும்.
109.பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை தேடித் தருபவளாக இருக்க வேண்டும்.
110.கல்வி என்பது விவேகத்தையும், நன்மை தீமையை பகுத்தறியும் திறனையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும்.