சத்யசாய் சிந்தனை வரிகள் - 12 | Satya Sai inspirational quotes in Tamil - 12
111.கடவுளிடம் மன அமைதியை மட்டும் வேண்டுங்கள். இதுவே எல்லோரும் செய்ய வேண்டிய பிரார்த்தனை.
112.சுயநலமற்ற சேவையில் ஈடுபடுங்கள். அதுவே மனம் அமைதி பெற வழி.
113.எல்லாரும் கடவுளின் குழந்தை என்பதை உணர்ந்தால் உலகமே அன்பு மயமாகி விடும்.
114.பூமிக்கு வரும் போது நாம் எதையும் கொண்டு வரவும் இல்லை. போகும் போது எதையும் கொண்டு போகவும் முடியாது.
115.மனிதநேயம், நல்லொழுக்கம், கருணை இம்மூன்று குணங்களும் மனிதனுக்கு மிகவும் அவசியம். இதனைக் கற்றுத் தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை
116.எந்தச் செயலையும் செய்யும் முன்பு, இறைவனை எண்ணித் துவங்குங்கள். உங்களுக்கு அவரருளால் வெற்றியே கிடைக்கும்.
117.பிறருக்கு துன்பம் ஏற்படாத வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
118.இன்றைய சிறப்பான செயல்பாடுகளே, எதிர்கால வாழ்க்கைக்கு ஆணி வேராக இருக்கிறது.
119.ஆரோக்கியமான வாழ்க்கையே உறுதியான வாழ்க்கை.
120.நன்றி உள்ளவனே நல்லவன். தன்னை உணர்ந்தவன். ஒருவர் செய்த நன்றியை மறப்பது பாவத்திலும் பாவம்.