சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள் | Shirdi Saibaba inspirational quotes in Tamil
1.சீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.
2.துவாரகா மாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.
3.இவ்வுலகை விட்டப் பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4.என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.
5.என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.
6.என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.
7.என்னிடன் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும், நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8.நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.
9.நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
10.நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.
11.என்னுடைய, பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.