சத்யசாய் சிந்தனை வரிகள் - 30 | Satya Sai inspirational quotes in Tamil - 30
291.துன்பத்தில் சிக்கித் தவித்தாலும், மனதில் மகிழ்ச்சியை இழக்காதவன் கடவுளுக்கு நிகரானவன்.
292.தினமும் நீராடுவதால் உடல் மட்டுமே சுத்தமாகிறது. சுயநலமற்ற சேவையில் தான், மனம் சுத்தமாகிறது.
293.பணம், அதிகாரம் எல்லாம் மனிதனுக்கு தேவையானவை தான். ஆனால், அதனால் அகந்தை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
294.சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். நல்லவர்களிடம் நட்பு பாராட்டுங்கள்.
295.அளவோடு பேசுங்கள். அதுவும் பிறரை புண்படுத்தாத விதத்தில் இனிமையுடன் இருக்கட்டும்.
296.கடலுக்கு அலையும், வானுக்கு நிலவும் போல, மனிதனுக்கு நேர்மையே அழகூட்டுகிறது.
297.பொறுப்பை ஏற்கும் முன் அதற்குரிய தகுதி, திறமையை மனிதன் வளர்த்துக் கொள்வது அவசியம்.
298.சேமித்த பணம் வறுமையில் பயன் அளிக்கும். சேர்த்து வைத்த புண்ணியமோ மறுமையிலும் துணை நிற்கும்.
299.யாரையும் தவறாக எண்ண வேண்டாம். அவர்களிடம் இருக்கும் நல்ல பண்பை மட்டும் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.
300.பெற்ற தாய், தாய்நாடு, தாய் மொழி ஆகிய மூவரையும் மதிப்பது நம் கடமை.
301.குழந்தையின் மனதில் அன்பை விதையுங்கள். ஜாதி, மத, இன பாகுபாடுகளை ஏற்படுத்தி பகையுணர்வை வளர்ப்பது கூடாது.
302.பெற்ற அன்னையைப் போல இயற்கை அன்னையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
303.கோபம் ஏற்படுவது மனித இயல்பு தான். ஆனால், கோபத்தில் எந்த முடிவும் எடுக்க முற்படாதீர்கள்.