எண்ணம், சொல், செயல் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil thoughts on intention, words and deeds
1.எண்ணங்களுக்குத் தக்கபடியே காரியங்களும் தீர்மாணிக்கப்படும்.
2.உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும்
3.கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும்
4.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
5.செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்டவனே மிகவும் கெட்டவன்
6.பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்
7.கோபம் என்பது தற்காலிகமான ஒரு பைத்தியக்காரத்தனம். ஆகவே, கோபத்தை நீ அடக்கு;இல்லையென்றால் அது உன்னை அடக்கி விடும்

8.முதலில் நீங்கள் மதுவை அருந்துகிறீர்கள். பின், அந்த மது மேலும் மதுவை அருந்துகிறது. பிறகு, மது உங்களையும் அருந்துகிறது!
9.உங்கள் எண்ணம் பண் பட்டு இருந்தால், உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால், உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண் பட்டுவிடும். இதனால், உங்கள் எண்ணங்களின் மேல் அதீதக் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.