அறிவு பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் 01 | Tamil Thought Line on Knowledge 01
1.தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை தெரியாது என்றும் அறிவதுதான் அறிவு.
-கன்பூசியஸ்
2.அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும்,அறிவுதான் சக்தி.
-சுவாமி விவேகானந்தர்
3.பொது அறிவு இல்லாத கல்வியை விட, கல்வி இல்லாத பொது அறிவானது ஆயிரம் மடங்கு சிறந்தது.
-இங்கர்சால்
4.உலகில் நல்லது ஒன்றே அறிவு, தீயது ஒன்றே அறியாமை.
-சாக்ரட்டீஸ்
5.உனது அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளவிட்டால் அது உன்னை அழித்துவிடும்.
-சாக்ரட்டீஸ்
6.நம்முடைய மனம் என்னும் காட்டுக் குதிரையை அடக்கிக் குறிப்பிட்ட சரியான வழியில் அதனை நடைபோட வைப்பதே பகுத்தறிவு.
-கி.வீரமணி
7.உரமிடாத பயிரும், படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே.
-கி.வீரமணி
8.நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது, அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.
-ஜவகர்லால் நேரு
9.நமது அறிவு யார் மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது.
-சார்லி சாப்ளின்
10.தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிட அதிகமான வாய்ப்புகளை புத்திசாலிகள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
-பிரான்சிஸ் பேக்கன்