அறிவியல் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil thoughts on science
1.தொழில்நுட்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால் நிறைந்திருக்கும்
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
2.ஒரு விஞ்ஞானி இரவு பகலாகக் கண்களைக் கெடுத்துக் கொண்டு புத்தகங்களில் மூழ்கியிருப்பான். கடைசியில் கிட்டப்பார்வையும் வந்துவிடும். இதுவரை அவன் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கடைசியில் பார்த்தால் கிட்டப்பார்வைக்கு மூக்குக் கண்ணாடி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிதான்.
-மசானபு புகோகா
3.மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுவதைப் பலரும் பார்த்தார்கள்; ஆனால் ஏன் என்று கேட்டவர் நியூட்டன் ஒருவரே.
-வில்லியம் ஹாஸ்லிட்
4.விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி.
-இராமகிருஷ்ணர்
5.அறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை. அது எலும்புக்கூட்டுடன் உலாவும் பிசாசு. அதற்கு ஆத்மா கிடையாது. வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்த்து அதிக உற்பத்தி செய்வதல்ல. மனிதர்களை முழுமைப் பெறச் செய்வதே.
-மசானபு புகோகா
6.நாம் இந்தியாவுக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம். எண்களைக் கொண்டு எண்ணச் சொல்லிக் கொடுத்தவர்கள் அவர்கள்தாம். அது இன்றி நாம் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளையெல்லாம் கண்டுபிடித்திருக்க இயலாது
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
7.ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு.
-ஐசக் நியூட்டன்
8.மனித அறிவாற்றல் என்பது எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் பணியைத்தான் அறிவியல் செய்துள்ளது.
-மசானபு புகோகா
9.விஷயங்கள் நிகழும் சந்தர்ப்பங்களை எல்லாம் தெரிந்த பிறகு, அவைகளின் காரணங்களைக் குறிப்பதுதான் விஞ்ஞான முறைக்குப் பொருத்தமாகும்.
-சிங்காரவேலர்