செல்லும் பாதை சரியாக இருந்தால் | அறிவுரை | Advice quotes in Tamil - 02
11.தன்னைப்பற்றி நினைப்பவனுக்கு நரக வாழ்வு; மற்றவனைப் பற்றி நினைப்பவனுக்கு சொர்க்க வாழ்வு.
-ரமணர்
12.வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
13.நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்
-அன்னை தெரசா
14.உறுதி மொழிகளை எப்போதும் நிதானித்து அளியுங்கள்; அவசரப்பட்டுக் கூறி பிறகு அவதிக்குள்ளாகாதீர்கள்.
-கி.வீரமணி
15.செல்லும் பாதை சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியாக இருக்கும். அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.
-மகாத்மா காந்தியடிகள்
16.நீங்கள் யாரையாவது விரும்பினால் அவர்களை போகவிடுங்கள்; அவர்கள் திரும்பி வந்தால், எப்போதும் உங்களுக்குரியவர்கள்; திரும்பி வரவில்லையென்றால், ஒருபோதும் உங்களுக்குரியவரல்ல.
-கலீல் ஜிப்ரான்
17.அறிவுரைகளை நாம் பிறருக்கு வழங்குமுன், கொஞ்சம் நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வது கட்டாயத் தேவை.
-கி.வீரமணி
18.நீ ஒருவனிடத்தில் உதவியாகப் பெறக்கூடியதை எக்காரணத்தை முன்னிட்டும் உரிமையாகக் கேட்காதே.
-சாக்ரட்டீஸ்
19.ஒவ்வொரு நாளையும் அறுவடைக்கான நாளென்று மதிப்பிடாதீர்கள், ஒவ்வொரு நாளும் விதைப்பதற்கான நாளென்று எண்ணுங்கள்.
-லூயிஸ் ஸ்டீவன்சன்
20.தாகத்திற்கு முன்பே கிணற்றைத் தோண்டு.
-கதே