பிறரது குற்றங்களைப்பற்றி | அறிவுரை | Advice quotes in Tamil - 03
21.பிறரது குற்றங்களைப்பற்றி ஒருபோதும் பேசாதே; அதனால் உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை.
-சுவாமி விவேகானந்தர்
22.சரியான இடத்தில் உங்கள் கால்களை வைத்துள்ளீர்களா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் பிறகு உறுதியாக நில்லுங்கள்.
-ஆபிரகாம் லிங்கன்
23.பிறரைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். அது உங்கள் உள்ளத்தின் மதிப்பைக் குறைக்கும்.
-இங்கர்சால்
24.மிகக் குறைந்ததைக் கொண்டு திருப்தியடைபவனே முதன்மையான செல்வம். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான்.
-சாக்ரட்டீஸ்
25.நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகள் அவசியம்.
-லியோ டால்ஸ்டாய்
26.நல்லதே நினை, நல்லதே பேசு, நல்லதே கேள், நல்லதே நடக்கும்.
-கண்ணதாசன்
27.எரிகிற விளக்காக இரு அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.
-டிஸ்ரேலி
28.என்ன தவறு நடந்தது என்பதற்கு பதிலாக, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
-டெனிஸ் வைட்லி
29.பிறரை சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
30.எந்தச் செயலைச் செய்வதற்கு முன்பும், எந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பும் கேள்வி கேளுங்கள். என்ன? ஏன்? எங்கே? எப்படி? எப்போது? எது? என்கிற கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.
-அரிஸ்டாடில்