மற்றவர்களுக்கு வழிகாட்டியாக | அறிவுரை | Advice quotes in Tamil - 04
31.நான் சுறுசுறுப்பானவன் என்பதை எப்போதும் நினைக்க வேண்டும். மனம் உங்களை வேலை வாங்கிவிடும்.
-வில்லியம் ஜேம்ஸ்
32.விதையை விதையுங்கள். ஆனால் எந்தக் கொடுங்கோலனையும் அறுக்க விடாதீர்கள். செல்வத்தைத் தேடுங்கள் ஆனால் எந்த ஏமாற்றுக்காரனையும் குவிக்க விடாதீர்கள்.
-ஷெல்லி
33.தெரிந்ததைச் சொல்லுங்கள், தவறில்லை. ஆனால் எல்லாம் தெரிந்ததாக நினைத்துச் சொல்லாதீர்கள்.
-வால்டேர்
34.மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் நீ எளிய வாழ்கையைக் கடைப்பிடி.
-ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
35.ஒரு பிரச்சினையை உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், அதை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
-ராபர்ட் ஹரோல்ட் ஷூல்லெர்
36.நடந்தவற்றை ஏற்றுக்கொள்வதே துரதிருஷ்டத்தின் விளைவுகளை எதிர்கொள்வதற்கான முதல் படி.
-வில்லியம் ஜேம்ஸ்
37.ஏற்கெனவே உள்ள பாதையில் பயணிக்காதீர்கள். மாறாக, பாதையே இல்லாத இடத்தில் பயணித்து தடத்தை விட்டுச்செல்லுங்கள்.
-எமேர்சன்
38.உங்களுக்கு எதை மற்றவர் செய்தால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்களோ அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்.
-கன்பூசியஸ்
39.எதனையும் ஆராய்ந்து பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இருந்தால் நம்பு; இல்லையேல் கடவுளே நேரில் வந்து கதறினாலும் பகுத்தறிவுக்குப் புறம்பான சொல்லையோ செயலையோ ஏற்காதே.
-கௌதம புத்தர்
40.கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம்.அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.
-சிசரோ