Type Here to Get Search Results !

காலையில் சிந்தனை செய் | அறிவுரை | Advice quotes in Tamil - 06




காலையில் சிந்தனை செய்  | அறிவுரை | Advice quotes in  Tamil - 06

51.உங்கள் வாழ்க்கை துணையை கவனமாக தேர்வு செய்யுங்கள்; இந்த ஒரு முடிவிலிருந்தே உங்களுக்கான 90 சதவீத மகிழ்ச்சி அல்லது துயரம் வருகின்றது.

-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

52.எப்போதும் மற்றவர்களைப் போல் ஆகும் முயற்சியில் இறங்காதீர்கள். அப்போது உங்களை நீங்களே இழந்து விடுவீர்கள். இதனால் நீங்கள் தனித்தன்மையை இழப்பதோடு, தானாக அடையக்கூடிய வளர்ச்சியையும் அடையாமல் தவறவிட்டு விடுவீர்கள்.

-ஓஷோ
53.காலையில் சிந்தனை செய்; நடுப்பகலில் செயலாற்று; மாலையில் உண்; இரவில் உறங்கு.

-வில்லியம் பிளேக்

54.தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!

-கௌதம புத்தர்

55.இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.

-கன்பூசியஸ்
56.உனது வீட்டில் எளிமையாகவும், பணிவாகவும் இரு. தொழில் செய்யும் இடத்தில மதிப்போடு இரு, பழகுபவர்களிடம் விசுவாசத்தோடு நடந்துகொள். நீ காட்டுமிராண்டிகளிடையே வசிக்க நேர்ந்தாலும் இந்த நோக்கங்களைக் கைவிட்டு விடாதே.

-கன்பூசியஸ்



57.யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால், ஓவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.

-கண்ணதாசன்
58.உங்கள் காலில் நில்லுங்கள், அது தானாகவே உங்களை வழிநடத்திச் செல்லும்.

-சிவானந்தா
59.நிறைய பேர் அறிவுரை பெறுகிறார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள்தாம் அதனால் பயன் பெறுகிறார்கள்.

-சைரஸ்
60.மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.

-இராமகிருஷ்ணர்

காலையில் சிந்தனை செய்  | அறிவுரை | Advice quotes in  Tamil - 06

AdviceQuotesinTamil51

AdviceQuotesinTamil52

AdviceQuotesinTamil53

AdviceQuotesinTamil54

AdviceQuotesinTamil55

AdviceQuotesinTamil56

AdviceQuotesinTamil57

AdviceQuotesinTamil58

AdviceQuotesinTamil60

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content