பணிவு வேண்டும் | அறிவுரை | Advice quotes in Tamil - 17
161.ஒரு செயலைச் செய்ய முடியாது என்பவர்கள் அச்செயலைச் செய்பவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
162.உதடுகளை மூடு; உன் இதயத்தைத் திற.
-சுவாமி விவேகானந்தர்
163.முடிவு எடுக்கத் திணறாதீர், முடிவு எது வந்தாலும் ஏற்கும் ராணுவ வீரர்களைப் போன்ற நெஞ்சுரம் தேவை.
-கி.வீரமணி
164.எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்து விட முடியாது, கையைப் பிடித்து இறக்கிப் படிப்படியாக அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்.
-வால்டேர்
165.பணிவு வேண்டும்; ஆனால் கோழைத்தனம் கூடாது. துணிவு வேண்டும்; ஆனால் தலைக்கனம் கூடாது.
-சாக்ரட்டீஸ்
166.நீங்கள் செய்ய விரும்பும் விஷயம் சரியானதாக இருந்து, அதில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால், தயங்காமல் அதைச் செய்யுங்கள். நீங்கள் தற்காலிகத் தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தால் 'பிறர்' என்ன கூறுவார்களோ என்று கவலைப்படாதீர்கள்.
-நெப்போலியன் ஹில்
167.சுமை தூக்க, சலிக்காமல் நடக்க, வெயில் மழையாயினும் பொருட்படுத்தாமல் இருக்க கழுதையிடமிருந்து கூட நீ அறிவு பெறுவது குற்றமல்ல.
-வால்டேர்