திருமணத்தில் பெற்றோர்களின் | அறிவுரை | Advice quotes in Tamil - 15
141.உங்களுக்காக நீங்கள் கோரும் உரிமைகளை, நீங்களும் ஒவ்வொரு மனிதருக்கும் கொடுத்திடுங்கள்.
-இங்கர்சால்
142.உண்மையான நண்பனாக இரு - அல்லது உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே!
-நேதாஜி
143.பிரச்சினைக்கான சிகிச்சையை விட அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே சிறந்தது.
-கதே
144.பிறர் மனம் வருந்த செயல் புரியாதீர்கள்; உங்கள் உரிமையை விட்டுவிடாதீர்கள்; பிறர் உரிமையில் தலையிடாதீர்கள்.
-ஜான் மில்டன்
145.திருமணத்தில் பெற்றோர்களின் தலையீடு இருக்கக்கூடாது. நாட்டின் ஒழுக்கத்திற்கும் அமைதிக்கும் இது மிகத்தேவை.
-மா சே துங்
146.நீ தனிமையாய் இருக்கும் போது வேலையின்றிச் சும்மா இருக்காதே!
நீ வேலையின்றிச் சும்மா இருக்கும் போது தனிமையாய் இருக்காதே!
-சாமுவேல் ஜான்சன்
147.முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள். அதில் நேரம் வீணாகிறது. நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழிவிடுவதே மேல்.
-ஆபிரகாம் லிங்கன்
148.உங்கள் பையனுக்கு நடக்கக் கற்றுக்கொடுங்கள். ஓடுவதற்குத் தானாகவே கற்றுக்கொண்டு விடுவான்.
-எமேர்சன்
149.எவர் சொன்னாலும் அதனை அப்படியே நம்பி விடாமல் அதன் உண்மைத் தன்மையை அறிந்து செயல்படவேண்டும்.
-திருவள்ளுவர்
150.புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிடப் பெரிய தப்பு.
-லியொனார்டோ டா வின்சி