அன்பு செலுத்துங்கள் | அன்பு | Anbu quotes in Tamil – 06
51.மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம்
-செஸ்ட்ர் பீல்டு
52.எல்லா மனிதருக்கும் மனிதம்,அன்பு என்பது சாத்தியமாகும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.
-சே குவேரா
53.எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்
-மகாத்மா காந்தியடிகள்
54.அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும்
-இங்கர்சால்
55.அன்பு கிடைக்கவில்லையே என்று ஏங்காதீர்கள். அன்பை கொடுக்கப் பழகுங்கள் அன்பு தானாகக் கிடைக்கும்.
-டேல் கார்னகி
56.தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
-சுவாமி விவேகானந்தர்
57.அன்பு செலுத்துங்கள் காலம் மிக குறைவாக இருக்கிறது
-அன்னை தெரசா