ஜலதோஷம் கூட | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 09
1. கடவுள் ஒரு கதவை மூடினா இன்னொரு கதவை திறப்பாராம்.. எனக்கெல்லாம் கதவையும் மூடிட்டு சாவிய தொலைச்சிட்டரு போல ..!
2. சின்ன வயசுல மிஸ்க்கு பயப்படுறதும்.. பெரிய வயசுல மிஸ்க்கு பயப்படுறதும்.. ஆண்களின் சாபம்..
3. ஜலதோஷம்கூட நம்ம கூட ஒருவாரம் தங்குது.. இந்த சந்தோஷம் தான் வந்த உடனே போயிடுது..
4. மனசும் மணி பர்சும் ஒன்னுதான்.. சில்லறை விஷயங்களை இறக்கி வைக்கும் வரை கனமா தான் இருக்கும்..
5. இதுவும் கடந்து போகும்’னு எனக்கு தெரியும்.. ஆனா இது ஏன் இவ்வளவு மெதுவா கடந்து போகுதுங்கிறது தான் தெரியல்ல..
6. இனிவரும் காலங்களில் ஒருத்தன் நல்லவன்னு பேர் எடுக்கனும்னா அதுக்கு ஒரே வழி.. அவனுக்கு பேரே நல்லவன்னு வைக்கனும்..
7. சந்தோஷம் வந்தா சீக்கிரம் அனுபவிச்சிடணும்.. கஷ்டம் வந்தா சீக்கிரம் அனுப்பி வெச்சிடனும்
8. ஆண்கள் எப்போதுமே கூந்தல் நீளமான பெண்ணைத் தான் தேடுகிறார்கள் ஆனால் கிடைப்பது என்னவோ வாய் நீளமான பெண் தான்
9. காதலித்துப்பார் நீ அழகாவது உனக்கு மட்டுமே தெரியும்.. பின்பு, நீ அசிங்கப்படுவது ஊருக்கே தெரியும்..
10. குத்து விளக்கு போல் பெண்ணை தேடுகிறான் ஆண்.. அலாவுதீன் விளக்கு போல் ஆண்ணை தேடுகிறாள் பெண்..