Type Here to Get Search Results !

எப்படா இவ பேசுவா | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 11



எப்படா இவ பேசுவா  | நகைச்சுவை | Comedy quotes in  Tamil – 11


1. உன் அப்பா ஏழை என்றால் அது உன் விதி.. ஆனால், உன் மாமனார் ஏழை என்றால் அது உன் இளிச்சவாய்த்தனம்..!

2. நீ காதலித்த பெண் உன்னை காதலிக்கவில்லை என்று கவலைப்படாதே... அது உன் எதிர்கால மனைவியின் வேண்டுதலாகக் கூட இருக்கலாம்...

3. திருடாதே, பொய் சொல்லாதே, ஏமாற்றாதே, அடுத்தவன் சொத்தை பிடுங்காதே.. ஏனென்றால் இவை அனைத்தையும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்.

4. மீனவனைத் தேடாத விமானமெல்லாம் வண்ணப்பொடி தூவி பறக்குதுங்க.. ஒட்டுத்துணி கூட ஏழைக்கில்ல பட்டு துணியில் கொடி பறக்குதுங்க.. சந்திரனுக்கும் ராக்கெட் போகுதுங்க.. சொந்த ஊருக்கு பஸ் வர மறுக்குதுங்க.. சட்டையில கொடி குத்தினா தேசப்பற்றுங்க.. சட்டையே இல்ல இது யாரு குற்றங்க.!

5. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியை தேடுவதும்.. மனைவி வந்த பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடலாகிறது..

6. ஏ பெண்னே.. உன் காந்த விழியால் என்னை ஈர்க்க நினைக்காதே.. ஏனென்றால், என்னிடம் இரும்பு சக்தி இல்லை..

7. என் வீட்டுக்கு திருடன் வந்துவிட்டால், அவனோடு சேர்ந்து நானும் பணத்தை தேடுவேன்..

8. கடவுளே... எனக்குனு எதுவும் வேணாம்... ஆனா, எங்க அம்மாக்கு நல்ல மருமகளா ஒரு பொண்ணு பாத்து கொடு..

9. ஒரு பெண், தனக்கு கணவன் வரும் வரை அவளது எதிர்காலத்தைப் பற்றி வருந்துவாள்... ஆனால், ஒரு ஆண், தனக்கு மனைவி வந்த பின் அவனது எதிர்க்காலத்தைப் பற்றி வருந்துவான்...

10. எப்படா இவ பேசுவா.. என்பதற்கும், எப்படா இவ பேச்ச நிறுத்துவா.. என்பதற்கும், இடையே உள்ள காலம் தான் ‘காதல்’...


எப்படா இவ பேசுவா  | நகைச்சுவை | Comedy quotes in  Tamil – 11


ComedyquotesinTamil101

ComedyquotesinTamil102

ComedyquotesinTamil103

ComedyquotesinTamil104

ComedyquotesinTamil105

ComedyquotesinTamil106

ComedyquotesinTamil107

ComedyquotesinTamil108

ComedyquotesinTamil109

ComedyquotesinTamil110

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content