அன்பை மட்டுமே | அன்பு | Anbu quotes in Tamil – 01
1.அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்..!
அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்குத் திரும்பிக் கிடைக்கும்..!
-அன்னை தெரசா
2.தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர், நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
-அரிஸ்டாடில்
3.ஒரு சிறிய அன்பை குழந்தைகளிடம் செலுத்திப் பாருங்கள், அதற்கான பெரிய பலனை அவர்களிடமிருந்து திரும்பப் பெறுவீர்கள்.
-ஜான் ரஸ்கின்
4.நுண்ணறிவுடன் அன்பும் சேர்ந்து விட்டால் அதனால் அடைய முடியாதது எதுவுமே உலகில் இல்லை!
-கதே
5.அன்பான உள்ளங்கள் அரசு கிரீடங்களை விட உயர்ந்தவை.
-ஆல்பிரடு டென்னிசன்
6.எங்கு அன்பு நிறைந்திருக்கிறதோ அங்குதான் ஆண்டவனும் இருக்கிறார்.
-லியோ டால்ஸ்டாய்
7.அனைத்து வகையான அறிவுக்குமான ஆரம்பநிலை ஒரு அன்பான இதயமே.
-தாமஸ் கார்லைல்
8.பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாக மட்டுமே தணிக்க முடியும்.
-கௌதம புத்தர்
9.மற்றவர்களை எடைபோடுவதில் காலத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போகும்.
-அன்னை தெரசா
10.பிரிவின் வேதனையில் மட்டுமே நாம் அன்பின் ஆழத்தைக் காணமுடியும்.
-ஜார்ஜ் எலியட்