பகுத்தறியும் ஆற்றல் | அறிவு | Knowledge quotes in Tamil - 03
21.அறிவு என்பது நதியை போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
22.அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அசைந்து கொடுப்பதில்லை.
-கௌதம புத்தர்
23.மனிதனிடம் அறிவு உறங்கினால் கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.
-பிளேட்டோ
24.மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.
-ஷெர்லாக் ஹோம்ஸ்
25.புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான்
-தந்தை பெரியார்
26.பலருக்கு கண்களுண்டு, பகுத்தறியும் ஆற்றல் சிலருக்கே உண்டு
-வின்ஸ்டன் சர்ச்சில்
27.பெண்களுக்கு வேண்டியது புத்தகப்படிப்பு மட்டுமல்ல; உலக அறிவும்தான்.
-தந்தை பெரியார்
28.படித்தவர்கள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் நல்லவர்கள் தேவைப்படுகிறார்கள் நல்ல தன்மையில்லாத அறிவாளியினால் தொல்லைகளே விளையும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
29.அறிவால் உழைப்பவர் ஆள்கின்றனர், உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர்.
-கன்பூசியஸ்
30.எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்து விடலாம் ஆனால் அதை ஒரு அறிவாளியால்தான் காப்பாற்ற முடியும்
-மகாத்மா காந்தியடிகள்