பலருக்கு கண்களுண்டு | அறிவு | Knowledge quotes in Tamil - 04
31.அறிவுடைய மேன்மக்கள் செய்யும் செயல்கள் எப்போதும் உயர்வுடையதாகவே இருக்கும். அவர்கள் வறுமை நிலையில் இருந்தாலும் இதில் இருந்து இம்மி அளவிலும் மாறமாட்டார்கள்.
-மகாவீரர்
32.நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்துக்கு அநேக பாதைகள் இருக்கின்றன. அடிப்படையில் இரண்டு ஒன்று அறிவு மற்றொன்று பயிற்சி.
-போதிதர்மன்
33.வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அறிவுதான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.
-சுவாமி விவேகானந்தர்
34.அறிவு உடையவர்கள் வேறொன்றும் இல்லாதவராயினும் எல்லாம் உடையவரே; அறிவில்லாதவர் எல்லாமுடையவராயினும் ஒன்றுமில்லாதவரே.
-திருவள்ளுவர்
35.உங்களுக்கு என்ன தெரியும் மற்றும் என்ன தெரியாது என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.
-கன்பூசியஸ்
36.பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது ஆகும்.
-தந்தை பெரியார்
37.நூலைப் படித்து, தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவை பெருக்கினால் ஆயுள் வளரும், இயங்கினால்தான் மூளை; இன்றேல் அது வெறும் ஈளை.
-கி.வீரமணி
38.அறிவு ஆள வேண்டிய இடத்தில், உணர்ச்சிப் போதையை ஏற்று வாழ்க்கையை வீணாக்காதீர், மானிடர்களே!
-கி.வீரமணி
39.அறிவுள்ளவனுக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
-எமேர்சன்
40.வாழ்கை ஒரு பாறை, உங்களிடம் அறிவு என்ற உளி இருக்கிறது. அழகாக சிற்பமாக வடித்து ரசிப்பதற்கு என்ன?
-அறிஞர் அண்ணா