எவர் பேசுவதையும் கேட்டுக்கொள் | அறிவுரை | Advice quotes in Tamil - 01
1.பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்
-சுவாமி விவேகானந்தர்
2.சுறுசுறுப்பு, மனஉறுதி என்ற வெற்றிக்குதிரைகளில் பயணம் செய்வான் புத்திசாலி.
-சாணக்கியர்
3.நிதானமாகவும், மிதமாகவும் இரு. உன் உடல் நலமாக இருக்கும்.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
4.இதயம் என்பது அறிவைவிட உயர்ந்தது. இதயத்தைப் பண்படுத்தி வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துங்கள்.
-மகாத்மா காந்தியடிகள்
5.எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்; ஆனால் சிலரிடமே பேச்சு கொடு.
எவர் கஷ்டத்தையும் தெரிந்து கொள்; ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே.
-ஷேக்ஸ்பியர்
6.யாருக்கும் அடிமையாய் இருக்காதீர்கள். உங்களுக்குத் தேவை என்று நீங்கள் உணரும் எல்லைவரை மட்டும் கடைபிடியுங்கள். ஆனாலும் எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்களே எஜமானனாய் இருங்கள்.
-ஓஷோ
7.புதியவற்றிலேயே முயற்சியும், ஆராய்வதில் ஆர்வமும் இருக்க வேண்டியது அவசியமாகும். அவற்றினால்தான் இயற்கையைப் படிப்பதும், முற்போக்கு அடைவதும் சாத்தியமாகும்.
-தந்தை பெரியார்
8.உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை.
-ஷேக்ஸ்பியர்
9.ஒரு கெட்ட பழக்கத்தைவிட வேண்டும் என்றால் ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தீவிரமான முயற்சி தேவை.
-இராமகிருஷ்ணர்
10.நிறை கண்டால் போற்றுங்கள்;குறை கண்டால் பேசாதீர்கள்!
-இயேசுநாதர்