Type Here to Get Search Results !

வாழ்க்கையில் கீழே விழும்போது | Motivational quotes in Tamil – 06

Top Post Ad



வாழ்க்கையில் கீழே விழும்போது   | Motivational quotes in  Tamil – 06



1. கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்தாதே. ஏனென்றால்.. கற்றுத்தருவதை வாழ்க்கை எப்போதும் நிறுத்துவதில்லை..!

2. எந்த முடிவு எடுத்தாலும் மூளை சொல்வதை கேள். மனதை கேட்காதே.. மனதுக்கு ஆசைப்பட தான் தெரியும். மூளைக்குத் தான் சிந்திக்க தெரியும்...!

3. சரியோ.. தவறோ.. உன் வாழ்க்கை என்னும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல் உன் கையில் இருக்க வேண்டும். மற்றொருவர் கையில் கொடுத்தால் கிறுக்கித் தள்ளிவிடுவார்கள்..!

4. வாழ்க்கையில் கீழே விழும் போது தூக்கி விட கைகள் இருக்காது.. ஆனால் தன்னம்பிக்கையுடன் எழுந்தால் கைத்தட்ட ஆயிரம் கைகள் காத்திருக்கும்..

5. மரணத்தைக் கண்டு ஆண்கள் எப்போதும் பயப்படுவதில்லை. ஆண்களின் பயமெல்லாம் தன் மரணத்திற்குப் பிறகு தன் குடும்பத்தின் நிலையைப் பற்றி தான்.

6. பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

7. பாதையைத் தேடுபவன் சாதாரண மனிதன்.. பாதையை உருவாக்குபவன் சாதனை மனிதன்..

8. வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு வாழ்ந்தால் நீ புத்திசாலி..! அதே நேரத்தில், தேவையை பெருக்கிக் கொண்டு அதை சமாளிக்கத் தெரிந்தால் நீ திறமைசாலி..! இரண்டுமே நம் கையில் தான் உள்ளது..!!

9. அருவியும், உறுதியான மனிதனும், தன் பாதையை தானே உருவாக்கிக் கொள்கின்றனர்..

10. நீ அடைகின்ற உயரம் உன்னால் உருவாக்கப்பட வேண்டும்.. அவமதித்த உறவெல்லாம் உன்னை அண்ணாந்து பார்க்கும் படி

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content