மனிதனின் கெட்ட குணங்களை | குணம்| Character quotes in Tamil - 01
1.குணத்தில் மிக உயர்ந்தவனும், குணத்தில் அடிமட்டத்தில் இருப்பவனும் ஒருபோதும் மாறவே மாட்டார்கள்.
-தாமஸ் புல்லர்
2.மனிதனின் இயற்கையான குணங்களில் ஒன்று, மிகச் சிறப்பாக சிந்தனை செய்வது. ஆனால் முட்டாள் தனமாகச் செயல்படுவது.
-சாக்ரட்டீஸ்
3.சிறந்த மனிதத் தன்மை அல்லது மேன்மைக்குணம் என்பது தொடுவானத்தில் எட்டாத தொலைவில் இருக்கின்ற இலட்சியம் அல்ல. நீங்கள் விரும்பினால் போதும் அது உங்கள் கைக்கு எளிதாக கிடைத்துவிடும்.
-கன்பூசியஸ்
4.உயர்ந்த குணமுள்ள மனிதன் தான் எதைப்பற்றி யாரிடம் பேசுகிறோம் என்பதைக் குறித்து மிகுந்த கவனம் செலுத்துவான்.
-கன்பூசியஸ்
5.பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
-அரிஸ்டாடில்
6.செல்வத்தின் இழப்பு எவ்வித இழப்புமில்லை; சுகாதாரத்தின் இழப்பு சிறிதளவு இழப்பே; குணத்தின் இழப்பே முழுவதுமான இழப்பு.
-பில்லி கிரஹாம்
7.உயர்ந்த குணம் படைத்தவன் தன்னிடமிருந்தே அனைத்தையும் எதிர்பார்ப்பான். ஆனால் அற்பகுணம் படைத்தவனோ மற்றவரிடமிருந்தே எல்லாவற்றையும் எதிர்பார்ப்பான்.
-கன்பூசியஸ்
8.நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.
-ஆபிரகாம் லிங்கன்
9.மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு; மனிதனை வெறுக்காதே.
-ஷேக்ஸ்பியர்