சுயமரியாதை | குணம்| Character quotes in Tamil - 02
10.வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றிமீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக்கூடாது.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
11.ஒருவருடைய நடத்தைதான் நண்பர்களையோ, விரோதிகளையோ உருவாக்குகிறது.
-சாணக்கியர்
12.விசுவாசத்திற்கும் நம்பகத்திற்கும் முதலிடம் கொடுத்து உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்லுங்கள். உங்களைவிட குணத்தில் தாழ்ந்தவர்களுடன் நட்பு கொள்ளாதீர்கள். உங்களிடம் தவறுகள் காணப்பட்டால் அதை திருத்திக் கொள்ள தயங்காதீர்கள்.
-கன்பூசியஸ்
13.ஒருவன் எதை உடையவன் என்பதன்று; எத்தகையவன் என்பதே வாழ்வின் முக்கியக் கேள்வி.
-லூயிஸ் ஸ்டீவன்சன்
14.உன்னைப் பிறர் விரும்பி நட்பு கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டால் மக்களால் பாராட்டத் தக்க நற்பண்புகளை நீ பெற்றிருக்க வேண்டும்.
-ஜார்ஜ் எலியட்
15.உயர்ந்த குணமுடையவர்கள் எப்போதும் தன்னலத்தைப் பற்றி கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் உலக நன்மைக்கான செயல்களில் ஈடுபடுகிறார்கள் தாமும் இவ்வுலகிலேயே வசிப்பதால், உலக நன்மையானது தமக்கும் நன்மையாகவே மாறிவிடுகிறது.
-சாணக்கியர்
16.நன்றி என்பது பயன் அடைந்தவர்கள் காட்ட வேண்டிய கடமை; உதவி செய்பவர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணமே ஆகும்.
-தந்தை பெரியார்
17.சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே வாழ்க்கையை சிறப்பான வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.
-ஆல்பிரடு டென்னிசன்
18.ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது.
-சிக்மண்ட் பிராய்ட்