வாழ்க்கையே | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 04
1. நாளைக்கு திங்கட்கிழமை என்று நினைக்கும் போது வரும் சோகத்தை விட நாளைக்கு புரட்டாசி மாசம் என்று நினைக்கும் போது வரும் சோகம் தான் அதிகம்..
2. முட்டாளுடன் ஓரு நாளும் விவாதம் செய்யாதீர்கள். ஏனெனில் வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு, உங்களில் யார் உண்மையான முட்டாள் என்று தெரியாமல் போய்விடும்.
3. ஏத்தனை சன் பெற்றாலும் கடைசி காலத்தில் கை கொடுப்பது ஏன்னவோ பென்சன் தான்..
4. தனி ஒருவனிடம் திருடுவதை திருடன் தீர்மானிக்கிறான். அனைவரிடமும் திருடும் திருடர்களை மக்களே தீர்மானிக்கின்றனர்.
5. வாழ்க்கையே ரவா மாதிரி.. உப்புமா செய்வதும், கேசரி செய்வதும், நம் கையில் தான் உள்ளது..
6. வாய்ப்பு என்பது வடை மாதிரி. நாம தான் காக்கா போல தேடிப் போய் தூக்கனும். பீட்சா மாதிரி வீடு தேடி வரும்னு காத்திருக்க கூடாது.
7. நம்மகிட்ட பல்சர் வண்டி இல்லையேனு வருத்தப்படுறத விட அல்சர் வராத வயிறு இருக்கேனு சந்தோஷபட்டுக்கனும்..
8. சிலருக்கு காரியம் ஆகும் வரை GOD ஆக தெரிந்த நாம், காரியம் ஆன பிறகு DOG ஆக மாறிவிடுகிறோம்.
9. காதல் என்பது சிக்ஸ்பேக் போல.. எப்போதும் அதை பராமரிக்க வேண்டும்.. நட்பு என்பது தொப்பை போல.. அதுவா வரும் போகவே போகாது..
10. திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் ‘தமிழனாய் இருந்தால் ஷேர் செய்’ என்றே எழுதியாகனும். ட்ரெண்ட் அப்படி..!