Type Here to Get Search Results !

வாயையும் பர்ஸையும் | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 03

Top Post Ad



வாயையும் பர்ஸையும்  | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 03



1. நம்ம சொந்தகாரர்கள் எல்லாம் ஹோம்தியேட்டர் மாதிரி.. நாம ஒரு விஷயத்த அவங்ககிட்ட சொன்னா அத அப்படியே நாலா பக்கமும் சொல்லிடுறாங்க..

2. பிரியாணி ருசியா இல்லனாக் கூட தாங்கிக்க முடியுது.. பிரியமானவங்க பிசியா இருக்குறத தான் தாங்கிக்க முடியல..

3. வாயையும் பர்சையும் அளவோட திறந்தா நம்ம வாழ்க்கை ரொம்ப சிறப்பா போகும்..

4. மாமியார் மருமகள் சண்டையில அம்மா கிட்ட கம்முன்னும், பொண்டாட்டி கிட்ட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்..

5. மத்தவங்களுக்கு பிடிச்ச மாதிரி பளபளப்பா வாழுறதவிட நமக்கு பிடிச்ச மாதிரி கலகலப்பா வாழணும்..

6. கஷ்டம் என்பது பொண்டாட்டி மாதிரி எப்பவும் நம்ம கூடவே தான் இருக்கும்.. சந்தோஷம் என்பது அவ தங்கச்சி மாதிரி அப்ப அப்போ வந்துட்டு போயிடும்..

7. பணம் வச்சிருக்கவன் எல்லாம் பணக்காரன் கிடையாது.. படுத்த உடனே தூங்குறவன் தான் உண்மையான பணக்காரன்..

8. அன்பே உன் மீது நான் கொண்ட காதல் பெட்ரோல் விலை போன்றது. அது கூடிக்கொண்டேதான் போகும்.

9. திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் இல்லையென்றால், கடவுள் வாழ விடமாட்டான். சாதிப்பொருத்தம் இல்லையென்றால், பெற்றோர்கள் வாழ விடமாட்டார்கள்

10. மிடில் கிளாஸ் வாழ்க்கை தான் எவ்வளவு கஷ்டம். எதிர்வீட்டுக்காரன் பார்த்தா பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டா ஏழையா நடிக்கணும்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content