காற்றைவிட கடும்வேகம் | எண்ணம் | Thought quotes in Tamil - 02
12.காற்றைவிட கடும்வேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்.
-ஷேக்ஸ்பியர்
13.வாழ்வின் போராட்டங்களை எப்போதும் வலிமையானவர்கள் வெல்வதில்லை. தன்னால் வெற்றி பெற முடியும் என்று நினைக்கும் ஒருவன்தான் இறுதியில் வெற்றி பெறுகிறான்.
-நெப்போலியன் ஹில்
14.நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
-ஆபிரகாம் லிங்கன்
15.மனிதர்கள் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்பவே உயர்ந்த நிலையிலும் தாழ்ந்த நிலையிலும் வாழ்கின்றனர்.
-எமேர்சன்
16.நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி நம் வசதிகளைப் பெருக்குவதைவிட நம் வசதிகளுக்கேற்றபடி எண்ணங்களைக் குறைக்க முயல்வது நல்லது.
-அரிஸ்டாடில்
17.எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது நாம் செய்யும் காரியங்களை, எண்ணும் எண்ணங்களை பொறுத்தது.
-சுவாமி விவேகானந்தர்
18.எதிர்காலத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது நிகழ்காலத்தையும் கெடுத்துவிடும், எதிர்காலத்தையும் கெடுத்துவிடும்.
-சுவாமி விவேகானந்தர்
19.தீய எண்ணங்களை நல்லெண்ணங்களாக மாற்றிப் பயிரிடுங்கள்; அது வெற்றியை அறுவடை செய்யும்.
-வில்லியம் ஜேம்ஸ்
20.விதைத்த விதை முளைக்கத் தவறினாலும், பெரும்பாலோர் எண்ணும் எண்ணம் செயலாகத் தவறாது.
-மு. வரதராசன்
21.நீ நினைப்பதைவிட நீ திறமைசாலி என்று எண்ணு.
-எமேர்சன்
22.உண்மையிலேயே சக்தி குறைந்து விட்டோமோ என்ற உணர்வே தனி மனிதனையும் சரி, ஒரு நாட்டையும் சரி, மிகவும் பாதித்து விடுகிறது.
-நார்மன் வின்சென்ட் பீல்