நல்ல எண்ணத்தோடு இரு | எண்ணம் | Thought quotes in Tamil - 03
23.உபயோகமற்ற எண்ணங்களை அகற்றி நான் நினைத்தது நடக்கும் என்று உறுதியான எண்ணங்களை உங்கள் உள்ளம் முழுவதும் நிரப்புங்கள்.
-சுவாமி விவேகானந்தர்
24.ஒவ்வொரு பேரறிவு-மிக்க செயல்களிலும் நாம் ஒதுக்கித்தள்ளிய நம் எண்ணங்களைக் காணலாம்; ஒருவித அயன்மை மிடுக்குடன் நம்மையே அவை வந்தடையும்.
-எமேர்சன்
25.நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
-வள்ளலார்
26.மனிதனே! உன் மனதில் தோன்றும் எண்ணத்தை உடனே சொல்லிவிடு. இல்லையென்றால், சில நாட்கள் கழித்து, உனது கருத்தை நீ வேறு ஒருவன் வாயிலாக கைகட்டி நின்று கேட்கவேண்டி வரும்.
-எமேர்சன்
27.நமது எண்ணங்கள் மற்றும் கற்பனை ஆகியவை மட்டுமே நமது சாத்தியக் கூறுகளுக்கான உண்மையான வரம்புகளாகும்.
-ஒரிசன் ஸ்வெட் மார்டென்
28.பெரிய எண்ணங்களை சிந்தனை செய்; ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு.
-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
29.மனிதன் தன் எண்ணங்களை நல்ல வழியில் செலுத்தினால் அவனது போக்கு உலகின் போக்குடன் பொருந்தும் அப்போது அவனது வாழ்வில் இனிமையும் அமைதியும், அழகும் மிளிரும்.
-தாகூர்
30.எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னைப் எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லை.
-லியோ டால்ஸ்டாய்
31.நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.
-சுவாமி விவேகானந்தர்
32.எண்ணம் இல்லாத செயல் - வரப்பற்ற வயல்; செயல் இல்லாத எண்ணம் - காட்டில் காய்ந்த நிலா.
-கி.வீரமணி
33.மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா