கோழை பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Coward quotes in Tamil
1.நான் போதிப்பது கோழைகளின் அகிம்சையை அல்ல.
-மகாத்மா காந்தியடிகள்
2.கோழை பலமுறை செத்துப் பிழைக்கிறான். ஆனால் வீரன் ஒருமுறைதான் சாகிறான்.
-ஷேக்ஸ்பியர்
3.வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.
-மு.கருணாநிதி
4.உலகில் கோழையாக மட்டும் இருக்கக்கூடாது.
-மகாவீரர்
5.சரியானது எது என்று உணர்ந்தபிறகும் அதைச் செய்யாமல் இருப்பதே மகா கோழைத்தனம்.
-கன்பூசியஸ்