அம்பேத்கர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Ambedkar Motivational Quotes in Tamil
1.பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.
-அம்பேத்கர்
2.தீண்டாமை என்பது சாதித்
துவேஷத்தில் இருந்து வளருகிற ஒன்று. சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பதென்பது நடக்கக் கூடியதல்ல.
-அம்பேத்கர்
3.ஓர் அடிமைக்கு அவன்
அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன்
தானாகவே கிளர்ந்து எழுவான்.
-அம்பேத்கர்
4.எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே
சுதந்திர மனிதன்.
-அம்பேத்கர்
5.சாதியை உடைப்பதற்கு உண்மையானத் தீர்வு கலப்பு மணமே.
வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது.
-அம்பேத்கர்
6.மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
-அம்பேத்கர்
7.உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை.
ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது!
-அம்பேத்கர்
8.தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைப் போல தரணியில் மோசமானவன் எவனுமில்லை.
-அம்பேத்கர்
9.மனித சமுதாயம் சட்டத்தின் மூலம் கட்டுப்பட வேண்டும் அல்லது அறத்திற்குக் கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் மனித சமுதாயம் சுக்கு நூறாக உடைந்து போகும்.
-அம்பேத்கர்
10.சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம்
பரவட்டும்.
-அம்பேத்கர்
11.எப்போதும் ஊக்கமாக சமூகசேவை செய்தால் உங்கள் முன்னோர்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாகச் சாதிக்க முடியும்.
-அம்பேத்கர்
12.மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!
-அம்பேத்கர்
அம்பேத்கர் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Ambedkar Motivational Quotes in Tamil