எமேர்சன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Emerson Motivational Quotes in Tamil
1.ஒவ்வொரு
நாளும் ஆண்டின்
மிகச்சிறந்த நாள்
என்று உன்
இதயத்தின் மீது
அழுத்தமாக எழுதிக்கொள்.
ஒவ்வொரு நாளையும்
உன்னால் மாற்றிக்
காட்ட முடியும்
மனதில் உறுதியிருந்தால்
-எமேர்சன்
2.இலக்கியம்
என்பது சிறந்த
நினைவுகளின் பதிவாகும்.
-எமேர்சன்
3.நம்பிக்கைதான்
வெற்றியின் ரகசியம்.
-எமேர்சன்
4.வலிமையற்றவர்கள்
அதிர்ஷ்டத்தின் மீது
நம்பிக்கை வைக்கின்றார்கள்;
வலிமை வாய்ந்தவர்களோ,
காரணம் மற்றும்
விளைவை நம்புகிறார்கள்.
-எமேர்சன்
5.ஊக்கமுற்ற
ஆன்மா சிரமமில்லாத
வெற்றியை வெறுக்கின்றது.
-எமேர்சன்
6.நீங்கள்
ஏற்கெனவே சாதித்த
விஷயங்களைத் தாண்டி,
வேறு எதையாவது
செய்ய முயற்சிக்காதவரை
உங்களால் ஒருபோதும்
வளர்ச்சியடைய முடியாது.
-எமேர்சன்
7.முதலாவது
செல்வமும், முதன்மையான
செல்வமும் உடல்
நலமே.
-எமேர்சன்
8.புத்திசாலி
பிறரைப்பற்றி உங்களோடு
பேசுவான். முட்டாள்
தன்னைப்பற்றி உங்களிடம்
பேசுவான். ஆனால்
பேச்சாளி உங்களைப்
பற்றியே உங்களிடம்
பேசிவிடுவான்.
-எமேர்சன்
9.பிறரிடம்
குற்றம் காண்பதால்
உள் மனம்
மாசடையும்.
-எமேர்சன்
10.ஒருபோதும்
தோல்வியடையாமல் இருப்பதில்
நமக்குப் பெருமை
இல்லை; ஒவ்வொரு
தோல்வியிலிருந்தும் எழுவதிலேயே
இருக்கின்றது.
-எமேர்சன்
11.ஊக்கமுடைய
மனிதன் தன்
கடமையைச் செய்து
கொண்டே இருப்பான்.
-எமேர்சன்
12.ஏற்கெனவே
உள்ள பாதையில்
பயணிக்காதீர்கள். மாறாக,
பாதையே இல்லாத
இடத்தில் பயணித்து
தடத்தை விட்டுச்செல்லுங்கள்.
-எமேர்சன்
13.உனக்கு ஒரு
நண்பன் கிடைக்க
வேண்டுமா? அப்படியானால்
நீ ஒரு
நண்பனாக மாற
வேண்டும். உனக்கு
ஒரு நன்மை
செய்யப்பட வேண்டுமா?
அப்படியானால் நீயும்
ஒரு நன்மையைச்
செய்தல் வேண்டும்.
-எமேர்சன்
14.உலக
சரித்திரத்தில் காணப்படும்
சாதனைகள் அனைத்தும்
உற்சாகத்தின் வெற்றிச்
சின்னங்களே!
-எமேர்சன்
15.உயர்ந்த அறிவினை
மற்றவர்களிடம் அறிவுறுத்த
முடியாது. அதை
ஒவ்வொரு ஆத்மாவும்
தனக்குத் தானே
அடைய முயற்சிக்க
வேண்டும். இந்த
உண்மையை வளர்க்கும்
விதமாகவே ஆசிரியர்கள்
கற்பிக்க வேண்டும்.
-எமேர்சன்
16.சோம்பேறி
என்பவன் ஒரு
நோய்பிடித்த மனிதன்.
அவனை அரசாங்கம்
நோயாளிகளை நடத்துவது
போல நடத்த
வேண்டும்.
-எமேர்சன்
17.நான்
சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்தெல்லாம்
புதிதாக ஏதாவது
கற்றுக் கொள்ள
வேண்டும் என்று
விரும்புகிறேன்.
-எமேர்சன்
18.நான் சந்திக்கும்
ஒவ்வொரு மனிதனும்
ஏதோ ஒரு
வகையில் என்னைவிட
உயர்ந்தவனாகவே உள்ளான்.
அதனால் எந்த
ஒருவனிடமிருந்தும் எனக்குத்
தெரியாத விஷயத்தை
என்னால் கற்றுக்கொள்ள
முடிகிறது.
-எமேர்சன்
19.பொறாமை மடமைக்கொப்பானது;
போலித்தனம் தற்கொலைக்கொப்பானது.
-எமேர்சன்
20.முயற்சியை
எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே
அவன் திறமை
அவனிடமிருந்து போய்
விடுகிறது.
-எமேர்சன்
21.நாம்
இன்பம் எண்ணும்
நறுமணத் தைலத்தை
பிறர்மீது தெளித்தால்
நம் மீதும்
சில துளி
விழாமல் இருக்காது.
-எமேர்சன்
22.கவிதை
என்பது பேசும்
ஓவியம்.
-எமேர்சன்
23.நான்
என்ன செய்ய
வேண்டும் என்பதே
என் கவலை!
என்னைப் பற்றி
என்ன நினைக்கிறார்கள்
என்பதல்ல.
-எமேர்சன்
24.கற்பனை
என்பது எல்லா
அம்சங்களிலும் உட்புகுந்து
வாழ்வை உன்னதமாக்குகிறது.
-எமேர்சன்
25.பார்க்க
கண்களை கொடுத்த
ஆண்டவன் பாராதிருக்க
இமைகளையும் கொடுத்திருக்கிறான்.
இரண்டையும் சரியான
சமயத்தில் பயன்படுத்துபவன்
புத்திசாலி.
-எமேர்சன்
26.ஆண்கள்
பொதுவாக தங்களின்
தாயின் உருவாக்கத்தைப்
பொருத்தே இருக்கின்றார்கள்.
-எமேர்சன்
27.யோசிப்பதானால்
ஆழமாக யோசியுங்கள்.
செயல்படுத்துவதானால் தீவிரமாக
செயல்படுத்துங்கள். விட்டுக்கொடுப்பதானால்
பெருந்தன்மையோடு விட்டுக்கொடுங்கள்.
எதிர்ப்பதானால் கடைசிவரை
எதிர்த்துக் கொண்டிருங்கள்.
-எமேர்சன்
28.அது
அவரது தனிப்பட்ட
கருத்து என
ஒதுக்குகிறோம், ஆனால்
உலகத்தில் எந்த
சீர்திருத்தமும் முதலில்
ஒரு தனிப்பட்ட
நபரின் கருத்தாகத்தான்
இருக்கும்.
-எமேர்சன்
29.ஒருவன்
உன்னை ஒரு
முறை அடித்தால்
அது அவனுடைய
தவறு.அவனிடம்
இரண்டாவது முறையும்
அடி வாங்கினால்
அது உன்னுடைய
தவறு.
-எமேர்சன்
30.உங்களுடைய
பணியைச் செய்யுங்கள்.
அப்போது நீங்கள்
உங்களுடைய சக்தியை
நீங்களே மீண்டும்
பெறுவீர்.
-எமேர்சன்
31.இலட்சியம்
இல்லாத வாழ்க்கை
கால்களால் நடப்பதை
விட்டு கைகளால்
நடப்பதற்கு ஒப்பாகும்.
-எமேர்சன்
32.முயற்சியை
ஒருவன் நிறுத்திவிடும்
அதே வினாடி
அவனது சக்தி
அவன் கைவிட்டு
நழுவிவிடும்
-எமேர்சன்
33.திருப்தியடையாமை
என்பது தன்னம்பிக்கையில்லாத
நிலையைக் குறிப்பதாகும்.
-எமேர்சன்
34.ஒவ்வொரு
கலைஞனும் முதலில்
தான் ஒரு
நல்ல ரசிகனாகவே
இருப்பான்.
-எமேர்சன்
35.மனிதர்கள்
தங்களின் எண்ணங்களுக்கு
ஏற்பவே உயர்ந்த
நிலையிலும் தாழ்ந்த
நிலையிலும் வாழ்கின்றனர்.
-எமேர்சன்
36.காதல்
மிக அபாயமான
மனநோய்.
-எமேர்சன்
37.நட்பால்
நமது ஆற்றல்கள்
அதிகரிக்கின்றன; பகையால்
அவை குறைகின்றன.
-எமேர்சன்
38.மனிதன்
தத்துவங்களை எப்போது
பேசுகிறான்?பிறரைப்
பற்றி நினைக்கும்போது.
-எமேர்சன்
39.நம்முடைய
தேவைகள் மிகக்
குறைந்தனவாக இருக்க
வேண்டும். பிறர்
சார்பின்றி நாமாகவே
அவற்றைப் பூர்த்தி
செய்து கொள்ள
வேண்டும். இதை
விட நேர்த்தியான
விஷயம் உலகில்
வேறு உண்டா?
-எமேர்சன்
40.ஒவ்வொரு
துன்பமும் ஒரு
வழிகாட்டி. இதுவே
நன்மையைத் தூண்டுகிறது.
-எமேர்சன்
எமேர்சன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Emerson Motivational Quotes in Tamil