கஷ்டம் என தெரிந்தும் | கணவன் மனைவி தமிழ் சிந்தனை வரிகள்| Husband and wife Quotes in tamil
31. கஷ்டம் என தெரிந்தும் இஸ்டப்பட்ட ஆண்களுடன் வாழும் பெண்கள்
தேவதைகள்!!
32. மனைவி என்பவள் உன்னில் ஒரு பாதி, உன் உயிரின் ஒரு பாதி, உடலின்
ஒரு பாதி, அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோவை மறக்க பழகுங்கள்!!
33. சாகும் வரை சந்தோசமாக இருப்பதற்கு பணம் ஒன்றும் தேவையில்லை,
நல்லதொரு துணை இருந்தாலோ, அமைந்தாலோ போதும், வாழும் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதற்கு!!
34. அழகில் மயங்கி காதலில் விழுந்துவிடலாம். ஆனால், வாழ்க்கை
முழுவதும் வாழப்போவது என்னமோ குணத்தை வைத்து தான் என்பதை மறவாதீர்கள்!!
35. அன்பான துணை அமைந்து விட்டால், ஆடம்பரமான வாழ்க்கை கிடைக்குதோ
இல்லையோ?! அன்பான வாழ்க்கை கிடைத்து விடும்..
36. கணவன் தன் மனைவிக்கு, ஏதாவது விலை உயர்ந்ததை தர வேண்டும்
என்று நினைத்தால், தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள். அன்பாக பேசுங்கள் அது போதும்!!
37. காதலித்தவரையே திருமணம் செய்யும் பாக்கியத்தை இறைவன் அனைவருக்கும்
தருவதில்லை!!
38. தன் பிரசவ மயக்கம் தெளிந்ததும் , ஒரு பெண் முதலில் பார்க்க
விரும்புவது தன் முதல் குழந்தையாகிய அவள் கணவனையே!!
39. திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு! பெண்ணின்
வாழ்வில் ஒரு மாற்றம்!! ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி மற்றொரு இடத்தில நட்டு வைக்கும்
விழா!!!
40. தன்னை விட தனது வாழ்க்கைத் துணைக்கு, அறிவும் திறமையும் அதிகம்
என்று தெரிந்தபின் பெண் சந்தோசம் கொள்கிறாள், ஆண் சந்தேகம் கொள்கிறான்.
41. துணை என்பது என்னோடு நிற்பவன் அல்ல எனக்காக வாழ்க்கை முழுவதும் நிற்பவன். ஏன் மீது தவறே இருந்தாலும் என்னை பிறரிடம் விட்டுக்கொடுக்காமல் நிற்பவன்
42. நமக்கு மனைவியை வர்றவங்க, நம்மளோட குடும்பத்தையும் அவங்க
குடும்பமா பார்த்துக்கொறது தான் கடவுள் நமக்கு கொடுக்கிற மிகச்சிறந்த பரிசு…
43. சொந்தங்கள் எதுவும் சரியாக அமைய விட்டாலும், வாழ்க்கை துணை
என்னும் ஒரு சொந்தம் சரியாக அமைந்துவிட்டால் போதும்.. அத்தனை உறவுகளையும் உலகையும்
வெல்லலாம்.
44. ஒரு ஆணின் மனக் காயத்துக்கு காரணம் அவன் மனைவியாக இருந்தால்…
அந்த காயத்திற்கு சிறந்த மருந்தாக திகழ அந்த மனைவியால் மட்டுமே முடியும்.!!
45. தன் மனைவியை அடிக்கடி குறை கூறிக் கொண்டிருக்கும் கணவனுக்கு
தெரியாது தன் முதுமையில் அவள்தான் தாயாவாள் என்று!!