நல்ல மனைவி | கணவன் மனைவி தமிழ் சிந்தனை வரிகள்| Husband and wife Quotes in tamil
16. உண்மையான கணவன் விரும்புவது மனைவியின் அழகை அல்ல, அவளின்
அளவற்ற அன்பை…
17. நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அல்ல. அவளின்
பெற்றோர்கள் வளர்த்த விதம்!!
18. கணவனை விட கணவனின் குடும்பத்தை நேசிக்கும் பெண்கள்தான் சரித்திரத்தில்
இடம் பெறுகிறார்கள்..
19. எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவி தான், ஒரு
பெண்ணுக்கு கணவன் தான் , அதற்க்கு இணை வேறு எதுவும் இல்லை.
20. விழுதுகள் மரத்தை தாங்கலாம், வேர் மட்டுமே அதை வாழ வைக்க
முடியும். கணவன் மனைவி எனும் உறவும் இதைப் போலத்தான்!!
21. கணவன் மனைவிக்கு குழந்தை பிறப்பது இயல்பு.. ஆனால் கணவன் மனைவிக்கும்,
மனைவி கணவனுக்கும் குழந்தையாவது வரம்..!
22. மனைவி கருவில் சுமக்காத முதல் குழந்தை தான் கணவன்…கணவனை பெற்றெடுக்காத
இரண்டாவது தாய் தான் மனைவி.
23. தன் கணவன் பணக்காரனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை கடன் காரனாக
இருந்து விடக்கூடாது என நினைப்பவள் தான் உண்மையான மனைவி!!
24. எனக்கு என் பெற்றோர்கள் எவ்வளவு முக்கியமோ…அதே அளவு எனக்காக
பெற்றவர்களை விட்டு வந்த என் மனைவியும் முக்கியம்!!
25. இரு உடல் ஓர் உயிராகி சிரிப்பிலும், சோகத்திலும் ஒன்றாய்
கலந்து, பிடித்த கையை விடாமல் சொர்க்கம் வரை செல்லும் உறவு தான் கணவன் மனைவி!!
26. மனைவியை விட்டுக்கொடுக்காத கணவன், கணவனிடம் எதையும் மறைக்காத
மனைவி, நண்பர்கள் போன்று பிள்ளைகள் இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே!!
27. மனைவி வீட்டில் இல்லை நிம்மதி! என்று அதிகம் நகைச்சுவையாய்
பேசினாலும், வீட்டில் நுழைந்தவுடன் மனைவியைக் காணாமல் தேடும் கண்களே ஏராளம்!
28. ஒரு பெண்ணுக்கு குழந்தை கொடுப்பது ஆண்மை இல்லை. இறுதிவரை
அந்த பெண்ணை உண்மையாக பார்த்துக் கொள்வதே உண்மையான
ஆண்மை.
29. தேவதை போல ஒரு மனைவி கிடைக்க வேண்டும் என்பதை தாண்டி, கிடைத்த
மனைவியை தேவதையைப் போல பார்த்துக் கொள்ள விரும்புகிறவர்
தான் உண்மையான ஆண்!!
30. அழகான மனைவி வேண்டாம்... என் வாழ்க்கையை அழகாக்கும் ஒரு சாதாரண
பெண் மனைவியாய் கிடைத்தால் போதும்!!