பயணிப்போம் ஒரு பயணம் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 21 | Tamil SMS Love Quotes
201.பயணிப்போம்
ஒரு பயணம்
கரம்பற்றி
களைப்பாகும்
வரை
காதல் தேசத்தில்...!
202.உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து
203.நீ
கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்
204.மனதில் காரிருள்
சூழ்ந்தபோது
உன் அன்பெனும்
ஜோதியில்
வாழ்வை
ஒளிமயமாக்கினாய்
205.உன்னளவுக்கு
அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்
206.தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது
207.இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
208.நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
209.என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து
210.மௌன
கவிதை நீ
ரசிக்கும்
ரசிகை நான்