காயங்களும் மாயமாகும் | தமிழ் SMS காதல் கவிதைகள் - 22 | Tamil SMS Love Quotes
211.சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான்
உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்
212.என்னை
துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது
213.ஏதேதோயெழுத
நினைத்து
உன் பெயரை
எழுதிமுடித்தேன்
கவிதையாக
214.நீ
நலமா
எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது
மனம்...
215.வருவேன்
என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்...
216.காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்
217.உன் நினைவுகளை
மீட்டியே
வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
218.நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்
219.நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது
220.சாலையோர
நடைப்பயிற்சியில்
காலைநேர
தென்றலாய் நீ...