மனிதம் இருக்கு | தமிழ் புதிய கவிதை - 01| New Kavithai in Tamil
1.மனிதம் இருக்கு
என்று நம்புங்கள்
அதை மற்றவர்களிடம்
இருந்து மட்டும்
எதிர்பார்த்து விடாதீர்கள்
2.மனபாரங்களால்
வீழ்ந்திடாமல்
தாங்கிக்கொள்ள
செய்கிறதே
இச்சிரிப்பு
3.எல்லா எதிர்பார்ப்புகளிலும்
ஏமாற்றம் என்ற பரிசும்
எல்லா ஏமாற்றத்திற்கு
பிறகும் பக்குவம்
என்ற பரிசும்
கிடைப்பதற்கு
பெயர் தான் வாழ்க்கை
4.மற்றவர்களை
தரம் தாழ்த்தி பேசுவதால்
ஒருபோதும் அவர்களின்
தரம் குறையப் போவதில்லை
5.மற்றவரோடு
நம்மை ஒப்பிட்டால்
ஒன்னு தாழ்வு
மனப்பான்மை ஏற்படும்
இல்லைனா தலைக்கணம் அதிகமாகும்
ரெண்டுமே வாழ்க்கையில
தேவையில்லாத ஆணி தான்
6.வெற்றி என்பது
ஒவ்வொரு முறையும்
முதல் இடத்தை
பெறுவது என்று
பொருள் அல்ல
இன்று வெற்றி
பெற்றாய் என்றால்
உன் செயல்பாடு
சென்ற முறையை
விட இம்முறை
சிறப்பாக உள்ளது
என்று மட்டுமே பொருள்
7.நாம் பிறருக்கு
செய்வதையே
நாமும் அடைவோம்
அன்பை கொடுத்தால்
அன்பு
வம்பை கொடுத்தால்
வம்பு
8.வான்வெளியில்
மாயம் நிகழ்ந்தது
மழை பெய்தது
மண் மலர்ந்தது
கார்மேகம் கண்ட
மயில் போல
என் மனம் மகிழ்ந்தது
(மழை)
9.புகழ்ந்தாலும்
இகழ்ந்தாலும்
புன்னகையோடு
கடந்து செல்பவரே
சரித்திரம் படைக்கிறார்
10.சொல்வதற்கு
ஒன்றுமில்லாத இடங்களில்
வணக்கத்துடன்
புன்னகை மட்டுமே
உதிர்த்து விட்டு
செல்லுங்கள்
உங்கள் மீதான
மதிப்பு உயரும்
11.நட்புக்களின்
எண்ணிக்கை எப்போதும்
மகிழ்ச்சியை தருவதில்லை
நல்ல எண்ணங்கள் கொண்ட
நட்புக்களே வாழ்வில்
நிலையான மகிழ்ச்சியை
அள்ளித் தர முடியும்
சிறப்பான நண்பர்களை
தேர்ந்தெடுங்கள்
சிறப்பான நண்பர்களாக
மற்றவர்களுக்கு திகழுங்கள்
12.நீ
எங்கு சென்றாலும்
உன்னை பற்றி
குறை கூறவே
சிலர் காத்துக்
கொண்டிருக்கும்
உலகம் இது
உன்னைப் பற்றி
குறை கூற அவர்கள்
உத்தமர்களும் இல்லை
அவர்கள் கூறியதை
எண்ணி கவலைப்பட
நீ கோழையும் இல்லை
13.தவமிருந்தாலும்
கிடைக்காத வரம்
பெற்ற அன்னையை
குழந்தையின்
வடிவில் பார்ப்பது
பல முறை ரசிக்கவைத்த காட்சி
14.நிம்மதி வேண்டுமென்று
தேடுகிறார்களே தவிர
ஆசைகளை கைவிட
யாரும் நினைப்பதில்லை
ஆசைகளை துறந்து பாருங்கள்
நிம்மதி என்றும்
உங்கள் வசப்படும்
15.எத்தனை பேர்
என்ன சொன்னாலும்
நமக்கு பிடித்தது போல்
நாம் வாழ்வதிலே
இருக்கிறது நமக்கென்ற
ஒரு அடையாளம்