இந்த உலகம் | தமிழ் புதிய கவிதை - 02| New Kavithai in Tamil
16.இந்த உலகம்
வதந்திகளை நம்பும் அளவிற்கு
நிஜம்
தன்னுடைய உண்மைத்தன்மையை
இழந்து விடுகிறது
17.முகமூடிகளையே
ரசித்து
பழகி விட்டீர்கள்
இயல்புகளில்
இனி சுவாரஸ்யம்
இருக்காது
18.இன்றைய நாளை
சிறப்பாக
வாழ கற்றுக் கொள்
ஏனெனில்
நாளை என்பது
விதியின் கைக்குள் இருக்கின்றது
19.உன்னால் உதிர்க்கப்பட்ட
வார்த்தைகளுக்கு
நீ உண்மையாக
இருக்க போராடினால்
எவ்வளவு
இக்கட்டான நிலையிலும்
அவ்வார்த்தைகளே
உன்னை காப்பாற்றும்
20.பிள்ளைகள்
வாழும் வாழ்க்கையே
பெற்றோரின் உடலுள்ளத்தின்
நலனை தீர்மானிக்கின்றது
21.நாம் யாரும்
தானே மாறுவதில்லை
யாரோ ஒருவரால்
மாற்றப் படுகிறோம்
நல்லவராக கெட்டவராக
ஏமாளியாக அப்பாவியாக
அறிவாளியாக முட்டாளாக
22.பொறுப்பு என்பது
சொல்லி கொடுத்து
வருவதல்ல
அது தானாகவே
நமக்குள் தோன்ற வேண்டிய
ஒரு ஆத்மார்தமான உணர்வு
23.குழந்தைகளின்
புன்னகையே
நாம் காணும்
சந்தோஷ உலகம்
24.தினம்
ஒரு பாடத்தை
கற்றுத் தருகிறது
நம் வாழ்க்கை
என்னும் பாடசாலை
அதை புரிந்தவர்கள்
பிழைத்துக் கொள்கிறார்கள்
புரியாதவர்கள்
புதைந்தே விடுகிறார்கள்
25.எதிர்பார்ப்புகள்
இல்லையென்றால்
ஏமாற்றங்கள் இல்லை
உண்மை தான்
அதேசமயம்
எதிர்பார்ப்புகள் நிறைந்தது
தானே மனித வாழ்க்கை
26.வேண்டாம் என்று
வீசப்பட்ட எதுவும்
தேவையற்றது இல்லை
நாம் வேண்டாம்
என்று நினைக்கும்
எதுவும் யாருக்காவது
அத்தியாவசியமாக இருக்கலாம்
27.வானம் அளவிற்கு
நல்ல எண்ணங்கள்
பரந்து விரிந்து இருக்கட்டும்
அதில் தீப்பொறி
அளவிற்கு கூட
தீய எண்ணங்களை விதைக்காதே
ஏனெனில்
இங்கு எல்லோரும்
நிலையில்லாதவர்கள்
நிரந்தரமில்லாதவர்கள்
என்பதால்
28.பெற்றோரை
மறவாதே
வருடத்துக்கு ஒருமுறை
கொண்டாட
அவர்கள் பண்டிகை அல்ல
29.கஷ்ட்டத்தில் இருக்கும்போது
கண்ணுக்கு தெரிபவர்களை
கடவுள் என்பதை
நம்ப மறுத்துவிட்டு
என் கண்களுக்கு
கடவுள் தெரிவதே
இல்லை என்று
குற்றம் சொல்லிக்கொண்டே
இருக்கிறோம்
30.எவ்வளவு கெட்டவர்களாக
இருந்தாலும் அவர்களிடம்
நாம் கற்றுக்கொள்ள ஏதாவது
ஒரு நல்ல பழக்கம்
கண்டிப்பாக இருக்கும்