சந்தோசம் என்பது| தமிழ் நிதர்சனமான கவிதைகள் - 01 | Tamil Realfact quotes in Tamil
1.சந்தோசம் என்பது
மற்றவர்கள் முன்
சிரிப்பது இல்லை
தனிமையில் இருக்கும் போதும்
அழாமல் இருப்பதே...!
2.உன்னுடைய நிகழ்காலம்
சிறப்பாக இருந்தால்
உன்னுடைய மோசமான
கடந்தகாலத்தை பற்றித்தான்
இந்த உலகமே
விவாதித்துக்கொண்டு இருக்கும்...!
3.விழும் வேகத்தைவிட
எழும்வேகம் அதிகமாய் இருத்தால்
தோற்கடிக்க அல்ல
உன்னை பார்க்கவே
உன் எதிரி பயப்படுவான்...!
4.உன் பின்னால்
இருப்பவர்களுக்கு தெரியாது
நீ வகுத்தபாதை எத்தனை
கடுமையானது என்று...!
5.அதிகபடியான
வேண்டுதல்
என்னயிருக்க போகிறது
நமக்கொரு
நல்வழியை காட்டு
என்பதை தவிர
6.எப்போது
நம் பேச்சுக்கு
ஒருவர் இடத்தில்
மதிப்பு இல்லை
என்று தெரிகிறதோ
அந்த இடத்தை
விட்டு விலகி விடுங்கள்
அவர்கள் நம்மை தேடும்
அளவிற்கு...!
7.அன்று ஜாமன்றிபாக்ஸை
திறக்க சிரமபட்ட
அப்பாக்களின் பிள்ளைகள்
இன்று சுலபமாக
செல்போனின் பேட்டர்ன்லாக்கை
திறந்து விடுகிறார்கள்...!
8.எந்நிலையிலும்
நீ யாருக்கும்
தாழ்ந்தவரில்லை
எப்போதும் உன்னை
நீ உயர்ந்தயிடத்திலேயே
வைத்திரு...!
9.தற்செயலாய்
கிடைப்பதில்லை வெற்றி
தன் செயலால் கிடைப்பதேவெற்றி
10.தட்டிகொடுக்க வருவார்கள்
என்று நினைத்திருந்த வேளையிலே
தட்டிவிட்டு செல்பவர்களை
வசைபாட வார்த்தையே இல்லை
11.நம்மை பற்றி
ஒவ்வொருவருக்கும் தனியான
பார்வை உண்டு
ஆதலால் பிறரிடம்
எமது பிம்பத்தை
அழகாக்கிக்காட்ட
சிரம்ப்பட தேவையில்லை
12.ஆயுள் குறைவென்றாலும்
அனைவராலும் ரசிக்கபடும்
மாதமாகவே இருக்கின்றது
பெப்ரவரி...!
13.நம் சிரிப்பில்
மறைந்த வலிகளை
கண்டறிய முடிந்தவர்கள்
தான் நம்சிறந்த
உறவுகளாக இருக்க முடியும்...!
14.நோக்கம் சரியாஇருந்து
கொஞ்சம்முயற்சி
இருந்தா போதும்
வாழ்க்கை ஜம்முன்னு
இருக்கும்...!
15.வாழ்க்கையின்
இன்னொரு பகுதியை
காட்டியது தனிமை
அப்போ சிந்தித்து பார்க்கும்
போது தான் புரிந்தது
என் வாழ்க்கையின் நிலைபாடு
16.எனக்கு எல்லாம் தெரியும்
என்பவனை விட
என்னால் முடியும்
என்பவனே மேலானவன்...!
17.எவ்வளவு நாளுக்கு
பின் பேசினாலும்
முன்பிருந்த அதே
பாசமும் நேசமும்
மாறாமல் பழகும்
நட்புகளே
நமக்கு கிடைத்த
வரங்கள்...!
18.காதல்
நேசிக்கபடுவதும்
வெறுக்கபடுவதும்
அவரவரின் அனுபவத்தை
பொறுத்தே...!
19.நீ ஒதுக்கப்படும் இடங்களில்
நிமிர்ந்து நில்
நீ புகழப்படும் இடங்களில்
அடக்கமாய் நில்
நீ விமர்சிக்கப்படும் இடங்களில்
மௌனமாய் இரு
நீ நேசிக்கப்படும் இடங்களில்
அன்புடன் இரு
20.பசிக்கு
கூழோ கஞ்சோ
போதும்
ருசிக்கு முடிவேயில்லை
(கேட்டதில் பிடித்தது)
21.நாம் வாழும் வீட்டில் எத்தனை
வசதி இருக்கிறது என்பதை விட
எவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கிறோம்
என்பதே முக்கியம்...!
22.பாதை எப்படி போகின்றது
என பார்க்காதீர்கள்
போகிறபாதை சரியானதா
என பாருங்கள் போகும்
இடத்தை அடைந்திடலாம்...!
23.காலம் யாருக்காகவும்
காத்திருப்பது இல்லை
ஆனால்
உன்னை நேசிக்கும்
உண்மையான இதயம்
நிச்சயம் உனக்காக
காத்திருக்கும் என்றும்
24.கிடைக்குமா என கேட்காதே
கிடைக்கும் என நம்பு
நடக்குமா என கேட்காதே
நடக்கும் என நம்பு
முடியுமா என கேட்காதே
முடியும் என நம்பு
25.தயங்கி
நிற்காதே
தன்னடக்கம் கூட
தவறாக தெரியும்
சிலரின் கண்களுக்கு
26.பணம் கொடுக்காத
மகிழ்வை
பாசம் கொடுக்கின்றது
(சிலநேரங்களில்)
27.வாழ்க்கை
மகிழ்ச்சியாக நகரும்
என்ற நம்பிக்கை
இருக்கும் நிலையில்
பணம் ஆம் பணத்தேவை
இந்த சூழல் சிலசமயம்
மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை
இழக்கவைக்கின்றது
28.நம்மை வெறுப்பதற்க்கும்
ஆளுங்க வேணும்
அப்போ தான்
நல்லா வாழ்றதுக்கான
வைராக்கியம் இருக்கும்
29.சொத்து இருக்குதுனு
சொல்லுறதுக்கும்
சொந்த உழைப்பு இருக்குதுனு
சொல்லுறதுக்கும்
நிறையா வித்தியாசம்
உண்டு...!
30.நாம் அழிவதை
பலர் வரவேற்றாலும்
நம் முன்னேற்றத்தை
விரும்பும் சில
உண்மையான நல் உள்ளங்களை
வாழ்வில் சம்பாதித்து
வைத்துக் கொள்ள வேண்டும்
சில உண்மை உறவின் தேடல்
31.சந்தர்ப்பமும்
சூழ்நிலைகள்
மட்டுமே
மனிதனின் குணத்தை
எடுத்துக்காட்டும் கண்ணாடி
32.நாளை
இந்நேரம் வரும்
ஆனால் போனது
போனது தான்
33.வேடம் போட்டால் நல்லவன்
காசு இருந்தால் கடவுள்
உண்மை பேசினால் பைத்தியக்காரன்
அன்பு காட்டினால் ஏமாளி
எடுத்து சொன்னால் கோமாளி
நவீன உலகில் மாறி
வரும் மாற்றங்கள்...!
34.இரக்கப்படுபவன்
ஏமாந்து போகலாம்
ஆனால்
தாழ்ந்து போவதில்லை
ஏமாற்றுபவர்கள்
வெற்றி பெறலாம்
ஆனால்
கடைசிவரை சாதிக்க போவதில்லை
35.பாவங்களுக்கு
எப்படியோ
மன்னிப்பு கிடைத்துவிடுகின்றது
நியாயங்கள்
தான் நிலுவையில்
நின்றுக் கொண்டிருக்கின்றன