தலையணையே அறியும் | Tamil Status Quotes -01
1.தலையணையே அறியும்
கனவுகளை மட்டுமல்ல
கண்ணீரையும்
2.பேசாத வார்த்தைகள்தான்
பொக்கிஷமென்றால்
நிறைய பொக்கிஷங்கள்
சேர்த்து வைத்திருக்கிறேன்
உன் இதயத்திடம்
சமர்ப்பிக்க
3.நிலையில்லா
நீர்குமிழியல்ல
நட்பு
அதன் உள்ளிருக்கும்
காற்று
நிரந்தரமானது
4.ஆவலாய் காத்திருக்கிறோம்
மழைக்காக குடையும்
உனக்காக நானும்
5.மறக்க நினைப்பதை
மறக்காமல் நினைப்பதே
மனதுக்கு வேலை
6.எப்பேர்பட்ட நம்பிக்கையும்
சந்தேகம் என்ற
சிறு தீப்பொறியால்
சிதைந்துதான்போகிறது
7.கிடைக்காமல்
போன இன்பங்களைவிட
தேடாமல்விட்ட
இன்பங்களே அதிகம்
8.கடந்துவந்த பாதையே
காலம் நமக்கு
கற்பிக்கும் பாடம்
9.விடியலின் அர்த்தம்
விளங்கவேயில்லை
நீயில்லா
பொழுதுகளில்
10.கடந்தகால அலட்சியம்
நிகழ்கால நீர்துளி
எதிர்கால ஏக்கத்துளி
11.மொழியோ முத்தமோ
விரும்பி சுவைக்கணும்
திணிக்கப்படாது
12.உறவுகள் மனம்
நோககூடாதுனு
எந்த விசயத்த
மறைக்கின்றோமோ
அதுதான் நமக்கே
ஆப்பு
வைக்குது பிரிவை
கொடுத்து
13.உன்னை இயல்பாக
கவர்ந்து வைத்திருக்க
என்னிடம் சொல்லிக்
கொள்ளும்
படி எதுவுமில்லை
என்னவனே
உன் மீதான
பைத்தியமும்
சில கவிதைகளும்
தவிர
14.சிலரின் மௌனம்
திமிரல்ல
அவர்களுக்குள்
இருக்கும் வலி
15.சோகத்திலும்
இன்பத்திலும்
பிரியாமல்
பிரியமாக இருக்கும்
உறவே போதும்
வாழ்க்கை
சிறப்பாக இருக்கும்
16.நாம நேசிச்சவங்க
நம்ம கூடத்தான்
இருக்கனும்னு இல்ல
நல்லா இருந்தாலே
போதும்
17.பொய்யான உலகில்
நானும் ஒரு
ஏமாளி ஆகிவிட்டேன்
அன்பு என்ற
ஒரு வார்த்தையில்
18.எதிர்பார்ப்பு
நிஜமாகும் போது
வாழ்க்கையும்
அழகாக மாறுகிறது
19.அதிகமாக பேசுபவன்
அறிவாளியும் இல்லை
அளந்து பேசுபவன்
முட்டாளும் இல்லை
20.தெரிந்த சிலரிடம்
கொடுத்த பணமும்
தெரியாத சிலரிடம்
காட்டிய பாசமும்
பல நேரம்
திரும்ப
கிடைப்பதே இல்லை
21.நல்லவர்களாக
இருப்பது தவறில்லை
நல்லது கெட்டது
தெரியாத நல்லவராக
இருப்பது தான்
தவறு
22.கஷ்டப்படுங்கள்
கவலைகள் தீரும்
கவலையாக இருக்காதீர்கள்
ஒருபோதும்
கஷ்டங்கள் தீராது
23.நீ போகும்
பாதையில்
மட்டுமல்ல
போகாத பாதையிலும்
காத்துக் கிடக்கிறது
உனக்காக என்
மனசு
24.எதையும் சாதிக்க
விரும்பும் மனிதனுக்கு
நிதானம் தான்
அற்புதமான ஆயுதமே
தவிர கோபம்
இல்லை
25.உறக்கம் வந்ததும்
என்னை தொலைவில்
வைக்கும் கனவு
நீ
26.வலிமையற்ற வார்த்தைகளும்
வலியைச் சேர்க்கும்
வேண்டியவர் வேண்டாதவராய்
பேசும் போது
27.வாழ்க்கையில்
எது கிடைக்காமல்
போனாலும் பரவாயில்லை
நம் மீது
அன்பும் அக்கறையும்
கொண்ட சில
உறவுகள்
மட்டும் கிடைத்தால்
போதும்
28.விதி வரைந்த
பாதையில்
விடை தெரியாத
விண்மீன்களாக விரைந்து
செல்லும் வாழ்க்கை
பயணம்
29.மனைவியை
தாயை போல
பார்த்து கொள்ளும்
ஆணும்
கணவனை
பிள்ளை போல
பார்த்து கொள்ளும்
மனைவியும்
தான் உண்மையான
காதலர்கள்
30.வசந்தம்
ஒரே நாளில்
மலர்ந்து விடுவதில்லை
அதே போல்
தான்
வாழ்வில் உயர்வும்
ஒரே நாளில்
கிட்டி விடாது