கண்ணீர் சிந்தும் | வலி பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் 01
1.கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம்!
2. நட்பின் துரோகம் கத்தியை போன்றது.. நண்பனை குத்தும் போது சுகமாகத்தான் இருக்கும். ஆனால் தன்னை குத்தும் போதுதான் கொடூரமாக வலிக்கும்.
3. எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும், அது போலத்தான் சில உறவுகளும்.. நாம் எவ்வளவுதான் அன்பாக இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்..!
4. திமிரானவர்களிடம் நாம் காட்டும் அன்பு அதிகம் வலிகளையே கற்றுக் கொடுக்கும்....!!!!
5. எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ, அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது..!!
6. உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.
7. பிறர் சொல்லும்போது ரசிக்க கூடியதும் நாம் அனுபவிக்கும் போது வலிக்க கூடியதும் காதல் மட்டுமே.
8. உணர முடியாத சந்தோசத்தை கொடுப்பதும்..! உணர முடியாத வலியை கொடுப்பதும்..! உங்கள் மனதிற்கு பிடித்தவர் மட்டும் தான்..!!
9. வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே....
10. தோற்றாலும் நம்பிக்கையோடு இரு. ஆனால்.. யாரையும் நம்பி தோற்று விடாதே அதன் வலி மரணத்தை விடக் கொடியது...!
11. நீ விழும்போது முதலில் உதவி செய்பவன், ஏற்கனவே அந்த வலியை உணர்ந்தவனாக இருப்பான்...!
12. கால்கள் நனையாமல் கடல் கடந்தவர் உண்டு.. ஆனால் கண்கள் நனையாமல் வாழ்க்கையை கடந்தவர் இல்லை...!
13. உன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம். பிறர் வலியை நீ உணர்ந்தால் மனிதனாக இருக்கிறாய் என்று அர்த்தம்
14. எல்லா ஆண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்க்கு ஒரு பெண்ணின் உண்மையான "அன்பு"..!
15. நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்..
16. எந்த ஒரு பெண்ணின் அமைதிக்கு பின்னாலும், அழிக்க முடியாத காயங்களும், உணர முடியாத வலிகளும் நிச்சயமாக இருக்கும்..!
17. உயிர் பிரியும் வலியை விட கொடியது காதலி பிரியும் வலி என்று கூறுபவர்கள், கதவு சாத்தும் போது கை வைத்து பாருங்கள்... பிறகு தெரியும் கொடிய வலி எதுவென்று...
18. பேசவவே கூடாது என முடிவு எடுத்த பின்பும், வலிகள் மறந்து, கோபங்கள் மறந்து.. பேச வைப்பது தான் உண்மையான அன்பு...!
19. சொந்தக் காலில் நிற்கும் போது தான் தெரிகிறது... இத்தனை நாள் சுமந்தவருக்கு எப்படி வலித்திருக்கும் என்று.!
20. ஒரு நாள் நீ நானாக வேண்டும்..! நான் நீயாக வேண்டும்..! அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை..