காயங்கள் இல்லாமல் | வலி பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் 02
21. அன்பை கொடுத்து ஏமார்ந்து விடாதீர்கள்.. அன்பை பெற்று ஏமாற்றி விடாதீர்கள்.. இரண்டிற்குமே வலி அதிகம்...
22. என்னதான் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் சில ஏமாற்றங்கள் வலிக்கத்தான் செய்கின்றது..!
23. காயங்கள் இல்லாமல் கனவு வேண்டுமானால் காணலாம். ஆனால்.. வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது..!
24. வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும். வலிகள் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்..
25. வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே..
26. உன் இதயத்தை ஒருவர் சுக்குநூறாக உடைத்தபிறகும், உடைந்த துண்டுகளை வைத்து மீண்டும் நேசிப்பதற்கு பெயர் தான் காதல்..!
27. ஒரு முறை காயம்பட்ட இதயம் மறுமுறை அன்பிற்கு எளிதில் அடிமை ஆவதில்லை...
28. எதிர்பார்ப்பது எல்லாம் அன்பை மட்டும் தான். ஆனால்.. கிடைப்பதெல்லாம் வலியும், ஏமாற்றமும் மட்டுமே..!
29. எல்லா வலிகளையும் வார்த்தைகளில் சொல்லிட முடியாது.. ஓசையின்றி அழுகின்ற ஓராயிரம் வலிகள் எல்லோர் இதயத்திலும் உண்டு..!
30. ஆசைக்காக காதலித்து இருந்தால் எவளோ ஒருத்தி என்று விட்டியிருப்பேன். வாழ்க்கைக்காக காதலித்தேன், அதனால் தான் இன்னும் வலிக்கிறது என் இதயம்..
31. தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம்..? மனதை காயப்படுத்த அங்கே எவரும்மில்லை..!
32. பிடித்த ஒருவரின் அழைப்பிற்காக காத்திருக்கும் வலி, உண்மையாய் நேசித்த சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்..
33. ஆறுதலே சொல்லமுடியாத சில வலிகளுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்..
34. தவறே செய்யாமல் வலிகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறது..! சில புரிந்து கொள்ளாத உறவுகளால்..
35. வலியை கற்றுக்கொள் கணக்கிடாதே.. வேதனயை எதிர்கொள் எதிர்க்காதே..
36. பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோசமாக இருக்கிறார்கள். உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகிறார்கள்.
37. காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் காதலித்துவிட்டு, அதை புரிந்து கொள்ள நினைக்கையில்தான் வாழ்வில் மரண வலிகளை உணர்கின்றோம்..
38. எனக்கு வலிக்கும் என தெரிந்த பிறகும், வலி தர உன்னால் முடியும் என்றால்.. வலிக்காத மாதிரி நடிக்க என்னாலும் முடியும்.
39. விருப்பம் இல்லாதவர்களை விரட்டிப் போவதைவிட விலகிப் போவது நல்லது.
40. உண்மையாய் நேசித்துவிட்டு தினம் தினம் அழுகும் ஒருவரிடம் கேளுங்கள் அன்பின் வலி என்னவென்று தெரியும்..