எதை தொலைத்தாலும் | தமிழ் புதிய கவிதை - 03| New Kavithai in Tamil
31.எதை தொலைத்தாலும்
தேடி கண்டுபிடித்து விடலாம்
ஆனால்
தொலைத்த வாழ்நாளை
மீட்டெடுக்கவே முடியாது
32.செய்த தவற்றை
சரி செய்யவோ
ஒப்புக்கொள்ளவோ
தைரியம் இல்லாதவர்கள்
அதன் பழியை அடுத்தவர்
மேல் போட்டு
நிரந்தர கோழைகளாகி
விடுகின்றனர்
33.பிறரை குறைத்து பேசி
உன் மதிப்பைக்கூட்ட
நினைக்காதே
அப்படி செய்வதால் கூடுவது
உன் தலைக்கணமே தவிர
மதிப்பல்ல
உணர்ந்தவன் உயர்வான்
34.நம்மை
ஒருவர் மதிக்கவில்லை
என்று நினைப்பது
முட்டாள்தனம்
அவங்களுக்கு
நம் மதிப்பு தெரியவில்லை
என்பதே உண்மை
அதற்கு நாம் பொறுப்பல்ல
35.ஒருத்தவங்கள பிடிக்கலன்னா
அவங்களப்பத்தி யாரென்ன
தப்பா சொன்னாலும்
நம்பத்தோணுதுல்ல
அதுக்கு பேர்தான்
(வன்மம்)
36.அதிகமான நண்பர்களை
கொண்டிருப்பது
முக்கியமானது அல்ல
உண்மையான நண்பர்களை
கொண்டிருப்பதே முக்கியமானது
37.உன் முன்னால்
புகழப்படும் பொன்னான
வார்த்தைகளைவிட
உன் பின்னால்
புகழப்படும் சாதாரண
வார்த்தைகள் தான்
உனக்கான மதிப்புமிக்க
சான்று ஆகும்
38.அவசரமாய் வாழ்வது
வாழ்க்கை அல்ல
அனுபவித்து வாழ்வது
தான் வாழ்க்கை
(அவசர உலகம்)
39.வாழ்க்கையும்
கிரிக்கெட் தான்
எதுவும் நடக்கலாம்
எதையும் ஏற்றுக்கொள்ளும்
மனவலிமை வேண்டும்
40.பல சந்தர்ப்பங்களில்
பல பெரிய தவறுகளை
செய்து தப்பித்த ஒருவன்
ஒரு சிறு தவறுக்கு
மாட்டிக்கொள்கிறான்
(அலட்சியம்)
41.வெளிச்சம் இல்லையென்றால்
நிழல் கூட உங்களை
மதித்து பின்னால் வராது
முடிந்தவரை முடியாதவர்களுக்கு
வெளிச்சமாய் இருப்போம்
42.சாதிப்பவர்கள் யாரும்
பெருமை பேசுவதில்லை
பெருமை பேசுபவர்கள்
யாரும் சாதிப்பதில்லை
43.வெற்றியின் கனியை
பறித்தவர்களே விடாமுயற்சியின்
பயனை முழுவதும்
உணர்ந்தவர்கள் எனலாம்
44.அது ஒரு அழகிய
காலம் என்று
சொல்லுமளவு ஏதேனும்
ஒரு நிகழ்வு
எல்லோர் வாழ்விலும்
இருக்கத்தான் செய்கிறது
45.கவலைப்படாதே
என்பதை விட
நான் பார்த்துக்கிறேன்
என்பது தான்
மிகச்சிறந்த ஆறுதல்